வர்ண பொருத்தம் என்றால் என்ன.?

Advertisement

Varna Porutham Endral Enna

பொருத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால் தான் திருமணத்திற்கு முக்கியமாக பொருத்தம் பார்ப்பார்கள். பெண்ணிற்கும் ஆணிற்கும் 10 பொருத்தமும் சரியாக இருந்தால் தான் முழு மனதுடன் இருவீட்டாரும் திருணம் செய்ய முன் வருவார்கள். ஆகையால், திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களில் ஒன்றான வர்ண பொருத்தம் என்றால் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஒரு பெண்ணிற்கும் சரி ஆணிற்கும் சரி திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியம். ஒரு குடும்பத்தை நல்ல முறையிலும் மகிழ்ச்சியாகவும் வழிநடத்த கணவன் மனைவி இருவருக்கும் ஒற்றுமை என்பது இருக்க வேண்டும். முக்கியமாக, இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். ஆகையால், ஜோதிடத்தில் திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணுக்கு பொருத்தம் பார்ப்பது வழக்கம்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

வர்ண பொருத்தம் என்றால் என்ன.?

வர்ண பொருத்தம் என்றால் என்ன

திருமணத்திற்கு பார்க்கப்படும் பொருத்தங்களில் ஒன்று தான் வர்ண பொருத்தம். இப்பொருத்தம் ஒருவருடைய குணமாக கருதப்படுகிறது. வர்ண பொருத்தம் என்பது, வேலை அல்லது தொழிலில் ஒருவருடைய நிலையை குறிக்கிறது. இதில்  முறையான வர்ண பொருத்தம் என்பது தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையைத் தொழில் வாழ்க்கையுடன் இணைத்து ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கிறது. 

அதுமட்டுமில்லாமல், ஜோதிடத்தின் படி, 12 ராசிகளும் வெவ்வேறு வர்ணங்களின் கீழ் அமைப்பாக உள்ளது. அவற்றை பற்றிய பின்வருமாறு காணலாம்.

வர்ணம்  ராசிகள்  அடையாள உறுப்பு
பிராமண வர்ணம் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் தண்ணீர்
க்ஷத்திரிய வர்ணம் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு நெருப்பு
வைஷ்ய வர்ணம் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் காற்று
சூத்ர வர்ணம் மிதுனம், துலாம் மற்றும் கும்பம் பூமி

வர்ண பொருத்தம் எப்படி பார்க்கப்படுகிறது.?

வர்ண பொருத்தத்தில் ஜாதகத்தில் பெண்ணை விட ஆணின் சந்திரப்பார்வை அதிகமாக இருக்கிறதா என்பது பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருப்பதையே திருமண பொருத்தம் சிறப்பாக இருக்கிறது என்பது கருதப்படுகிறது. அதாவது, மணமகனின் வர்ணம் மணமகளின் வர்ணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் அல்லது மணமகளின் வர்ணத்திற்கு சமமாக இருக்க வேண்டும். 

வர்ண பொருத்தம் நன்றாக இருந்தால் திருமணம் ஆன பிறகு, கணவன் மனைவி இருவரும் தான் வீடு மற்றும் தொழில் இரண்டிலும் ஒற்றுமையாக இருந்து வழிநடத்துவார்கள். வர்ண பொருத்தம் சரியாக இல்லையெனில் கணவன் மனைவி இருவருக்கும் வீடு மற்றும் தொழில் இரண்டிலும் அடிக்கடி வீண் விவாதங்கள் ஏற்படும்.

திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா?

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement