வருமானத்தை அதிகரிக்க கல் உப்பை வீட்டில் இப்படி வைத்து பாருங்கள்..!

Varumanam Peruga Tamil

வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம் | Varumanam Peruga Tamil

Varumanam Peruga Tamil – இன்றைய கால கட்டத்தில் வீட்டின் செலவுகளை சமாளிப்பது என்பது ஒவ்வொரு மாதமும் மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. என்னதான் சம்பாரித்தலும் வரைவை விட செலவுகள் தான் அதிகமாக உள்ளது. வீட்டின் வருமானத்தை அதிகரிக்க பல வகையான குறிப்புகளை பின்பற்றிருப்பீர்கள் ஆனால் வருமானம் அதிகரித்திருக்காது. உங்கள் வீட்டின் வருமானத்தை அதிகரிக்க கல் உப்பை கீழ் கூறப்பட்டுள்ளது போல் வைத்து பாருங்கள். சில நாட்களிலேயே நல்ல மாற்றம் தோன்றும். சரி வாங்க வருமானத்தை அதிகரிக்க கல் உப்பை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பணம் வரவு அதிகரிக்க கல் உப்பு பரிகாரம்:

பொதுவாக கடலில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்திருக்கே ஆன்மிகம் ரீதியாகவும், விஞ்ஞானம் ரீதியாகவும் பல மகத்துவம் உண்டு என்று சொல்லப்படுகிறது.

அந்த கடல் நீரில் இருந்து எடுக்கப்படும் பொருள் தான் உப்பு. ஆக  இந்த உப்பிற்கு சக்தி அதிகமாக தான் இருக்கும். இதன் காரணமாக தான் உப்பிற்கு நம் முன்னோர்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

அதிலும் கடல் தண்ணீரில் குளித்தால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பதும் நம் ஐதிகமாக உள்ளது. சரி இப்பொழுது நமது வீட்டில் வருமானத்தை அதிகரிக்க கல் உப்பு பரிகாரத்தை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு கல் உப்பைக் கொட்டி வைத்து அதில் சில்லரை காசுகளை போட்டு சேமித்து வாருங்கள்.

மாதம் ஒருமுறை அதனை எடுத்து பெருமாள் கோவில்களில் உண்டியலிலோ அல்லது தர்ம காரியத்திற்கோ செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

மன நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் நிறைந்து இருக்கும்.

இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும். முழு மனதோடு இந்த பரிகாரத்தை நீங்கள் மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

தொடர்புடைய பதிவுகள் 👇👇
1 கேட்டதெல்லாம் கிடைக்க கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!
2 காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
3 கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள் 
SHARE