Varuvandi Tharuvandi Song Lyrics in Tamil
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளுக்கு பூஜை செய்யும் போது அவருக்கு உகந்த மாலை மற்றும் பூ, வாழைப்பழம், பிரசாதம் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். அவருக்கு இப்படி வணங்குவதால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவே நம்முடைய வேண்டுதல் நிறைவேறிவிட்டால் அதற்கு தனியாக கடவுளுக்கு பூஜை செய்வோம்.
பல நபர்களிடம் அவர்கள் பூஜை செய்யும் பொழுது அந்தந்த கடவுளுக்கு உரிய பாடல்களை பாடுவார்கள். இப்படி பாடுவதால் நேர்மறை எண்ணங்கள் காணப்படுகிறது என்று நினைக்கிறார்கள். சில பேர் பாட முடியாவிட்டாலும் டீவியில் ஒலிக்க விடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.
வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள்:
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு
அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்.
வருவாண்டி தருவாண்டி மலையாண்ட
பழனி மலையாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…
மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |