வசந்த பஞ்சமி என்றால் என்ன
பொதுவாக இந்துக்களுக்கு மாதந்தோறும் பண்டிகை இருந்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பயனையும், ஒவ்வொரு சம்பிரதாய முறை படி நடக்கும். அதனை பற்றி நாம் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். அந்த வரிசையில் இப்போது விளம்பரத்தில் அதிகமாக பார்ப்பது வசந்த பஞ்சமி, இந்த நாளன்று நகை கடையில் தள்ளுபடி வழங்குவதாக விளம்பரம் வந்து கொண்டே இருக்கிறது.
அப்படினா என்ன, இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்று பல கேள்விகள் இருக்கும். அதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு இருக்கும். சரி வாங்க இதில் வசந்த பஞ்சமி என்றால் என்ன, எப்போது வருகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வசந்த பஞ்சமி என்றால் என்ன.?
வசந்த பஞ்சமி என்பது தை மாதத்தில் வரக்கூடிய முக்கிய நாளாக இருக்கிறது. மாதம் மாதம் இரண்டு பஞ்சமி வந்தாலும் இந்த தை மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி விசேஷமாக இருக்கிறது. இந்துக்கள் முறையில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
வசந்த பஞ்சமி ஆனது கல்வி, ஞானம் போன்றவற்றை வழங்க கூடிய சரஸ்வதி தேவியின் தினமாக இருக்கிறது. இதனால் இதனை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி போன்ற பல பெயர்கள் இருக்கிறது. ஆகவே இந்த நாளானது சரஸ்வதி தேவியை கொண்டாடும் நாளாக இருக்கிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை வணங்குவதால் கல்வி, ஞானம், கலை, இசை போன்ற துறைகளில் சிறந்து இருக்க முடியும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
வசந்த பஞ்சமி எப்போது.?
இந்த நாளில் நீங்கள் சரஸ்வதி தேவியை நினைத்து வழிபட்டால் கல்வி, ஞானம், கலை, இசை துறைகளில் சிறந்து இருக்க முடியும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
வசந்தி பஞ்சமி வழிபடும் முறை:
இந்த வசந்த பஞ்சமி நாளான பிப்ரவரி 2-ம் தேதி சீக்கிரமாக எழுந்து குளிக்க வேண்டும். இந்த தினத்தில் மஞ்சள் நிற ஆடையை அணிவது சிறந்ததாக இருக்கும். அதன் பிறகு சரஸ்வதி தேவியை பொட்டு வைத்து மலர்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
பிறகு இனிப்புகள், பழங்கள், மஞ்சள் நிறத்தில் உள்ள உணவுகள் போன்றவை செய்து சரஸ்வதி தேவிக்கு படைக்க வேண்டும். அதன் பிறகு விளக்கேற்றி, சாம்பிராணி, ஆரத்தி காட்டி தேவியை வணங்க வேண்டும். இப்படி நீங்கள் சரஸ்வதி தேவியை வழிபட்டால் உங்களின் குழந்தைகளுக்கு கல்வி, ஞானம், கலை, இசை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |