வாஸ்து படி வீட்டில் போன்சாய் மரம் வளர்க்கலாமா…..

Advertisement

போன்சாய் மரம்

நாம் அனைவருக்கும் நாம் வாழும் இடம் இனிமையானதாகவும், ஒரு நேர்மறையான சூழலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். நாம் எதிர்பார்க்கும் நேர்மறையான எண்ணங்கள் வர பழங்காலம் முதல் நம்புவது வாஸ்து தான். நாம் ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ கட்டும்போது அந்த இடத்திற்கான வாஸ்துகளை பார்ப்போம். அப்படி வாஸ்து பார்த்து கட்டுவது சிறந்தது. வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் ஐம்பூதங்களை மையப்படுத்தி அமைக்கும்  அறிவியல் ஆகும். இது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், நிதி மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வாஸ்து படி வீட்டில் சில மரங்கள் வைத்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி அமைதியான சூழல் ஏற்படும் என்பது நம்பிக்கைக்கு அந்த வகையில் உங்கள் வீட்டில் போன்சாய் மரம் வைக்கலாமா எங்கு வைப்பது நல்லது, போன்சாய் மரம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன, பார்ப்போம் வாருங்கள்.

Vashththu Padi Vittil Bonsai Maram Valarkalama

bonsai vasthu

போன்சாய் என்பது ஒரு ஜப்பானிய சொல். இதற்கு அர்த்தம், தொட்டியில் வளரக் கூடிய மரம் என்பது ஆகும். ஒரு சராசரி மரம் மூன்று அடி உயரம் வரை இருக்கும்

போன்சாய் வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் நேர்மறையான சக்திகளை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது மெதுவாக வளரக்கூடியது என்பதால், அவை மந்தமான வளர்ச்சியை பிரதிபலிப்பதாகும். இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல. போன்சாய் மரத்தை அலுவலக அறையின் தென்கிழக்கு அல்லது தெற்கு மூலையில் வைப்பது நல்லது.

இந்த மரங்களை வீட்டில் வளர்த்தால் நன்மை பெருகும் | Veetil Valarka Vendiya Marangal

போன்சாய் மரம் வீட்டில் உள்ள எதிற்மறையான விசயங்களை அறிவதற்கு உதவும். இந்த மரங்கள்  உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இறந்து விட்டால் அந்த இடத்தில் ஒரு எதிர்மறையான சக்தியுள்ளது என்று அர்த்தம்.

போன்சாய் மரம்  வெளிப்படுத்தும் ஆக்ஸிஜன் வளிமண்டல சூழலுக்கு நல்லது மற்றும் உங்கள் வீட்டிற்குள் உள்ள காற்றை சுத்தப்படுத்துகிறது. வீட்டில் போன்சாய் செடிகளை வளர்ப்பது, மன அழுத்தத்தைத் தணிக்க ஒரு சிறந்த சூழலை உங்களுக்கு அமைத்து  தரும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

Advertisement