வாஸ்து செடிகள்..! Vastu Plants For Home..!
Vastu Chedi/ வாஸ்து செடிகள்: அனைவருக்கும் வணக்கம்..!!! இன்றைய பொதுநலம்.காம்– ல் வீட்டில் என்னென்ன வாஸ்து செடிகள் வளர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். ஒவ்வொரு செடிகளிலுமே எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அதனுடைய முக்கியத்துவம் யாருக்கும் தெரிகிறது இல்லை. அனைவரின் வீட்டிலும் செடிகள் வளர்ப்பது இப்போது குறைந்துவிட்டது. அதன் காரணம் பணம், வேலை, நகர வாழ்க்கை என்று தேடி சென்று விட்டனர். செடிகள் வளர்ப்பதினால் வீட்டிலும் கஷ்டம் நீங்கி லக்ஷ்மி கடாட்சம் இருக்கும். அந்த வகையில் இப்போது நீங்கள் குடி இருக்கும் இல்லங்களில் வாஸ்து முறைப்படி என்னென்ன செடிகளை வளர்க்கலாம் என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம்..!
வாஸ்து நாட்கள் 2024..! |
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்:
வாஸ்து செடி – வாடாமல்லி:
- மலர் வகைகளில் வாடாமல் இருக்கும் தன்மை கொண்ட பூ வாடாமல்லி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வாஸ்து ரீதியாக வாடாமல்லி செடியினை வீட்டில் வளர்த்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் வரும்.
வாஸ்து செடி – கோழிக்கொண்டை:
- வாஸ்து சாஸ்திரம்படி வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகளுள் ஒன்று இந்த கோழிக்கொண்டையும். வாடாமல்லி போன்றே இந்த செடியும் வாடாத நிலை கொண்டவை.
- இந்த கோழிக்கொண்டை செடியினை வீட்டில் வளர்த்து வர வீட்டு பூஜை அறைக்கு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் மாலைகளுக்கு இந்த பூவினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாஸ்து செடி – பொன் அரளி:
- மஞ்சள் நிறத்தினை உடைய பொன் அரளி பூ செடியினை வளர்த்து வந்தால் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
வாஸ்து செடி – சங்கு பூ:
- சங்கு பூ செடிகளில் 2 வகை உள்ளன. ஒன்று நீல நிறமும், மற்றொன்று வெள்ளை நிறத்தை சேர்ந்தவையாகும்.
- சங்கு பூவானது வீட்டிற்கு மிகவும் அழகு சேர்க்கக்கூடிய பூவாகும். நீளம், வெள்ளை நிறம் கொண்ட சங்கு பூ சிவன் மற்றும் விநாயக பெருமானுக்கு உகந்த மலராகும். இந்த பூவினை வீட்டில் வளர்த்து வரலாம்.
வாஸ்து செடி – துளசி:
- முக்கியமாக அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிதான் இந்த துளசி. இந்த துளசி செடியானது மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது.
- வாஸ்து செடியான துளசியினை வீட்டில் வளர்த்து வரலாம். துளசி சாப்பிட்டு வ்ருவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள்…! |
வாஸ்து செடி – மூங்கில்:
- வாஸ்து முறையான மூங்கில் செடியினை வீட்டில் வளர்த்து வந்தால் நம் உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.
- மேலும் மூங்கில் செடியினால் வீட்டில் செல்வம் அதிகமாக இருக்கும்.
வாஸ்து செடி – கற்றாழை:
- கற்றாழையில் நாம் எண்ண முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
- கற்றாழை செடியினை வீட்டில் வளர்த்து வந்தால் வாஸ்து ரீதியான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.
வாஸ்து செடி – தொட்டாற்சிணுங்கி:
- தொட்டாற்சிணுங்கி செடியில் முட்கள் இருப்பதால் வீட்டில் சிலர் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள்.
- ஆனால் இந்த செடியினை வீட்டில் வளர்த்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரமானது கூறுகிறது.
வாஸ்து செடி – செம்பருத்தி:
- தலைமுடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த செடி இதுதான்.
- மேலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த செம்பருத்தி செடியினை வீட்டில் வளர்த்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.
வாஸ்து செடி – மணி பிளாண்ட்:
- மணி பிளான்ட் செடியினை வளர்த்து வர கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வ வளம் அதிகரித்து காணப்படும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |