பூஜை அறை & பீரோவை வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் ? Vasthu tamil

Vasthu direction in tamil

வீடு வாஸ்து சாஸ்திரம் (vasthu shastra tamil) – வாஸ்து மூலைகள்..!

வாஸ்து மூலைகள் – வாஸ்து சாஸ்திரம் (vasthu shastra) என்பது ஒரு மனை எந்த திசையை நோக்கி அமைந்துள்ளது. அந்த மனையானது எந்த திசையை நோக்கி வீடு கட்ட வேண்டும்.

எந்த திசையில் வாசல் இருக்க வேண்டும், என்னென்ன திசையில் என்னென்ன அறைகள் இருக்கவேண்டும், என்ற கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

வாஸ்து சாஸ்திரம் (vasthu shastra in tamil) படி ஒரு மனையை கட்டினால் தான், அந்த வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகளவு இருக்கும் என்று வாஸ்து சாஸ்த்திரங்கள் கூறுகின்றனர்.

எனவே வாஸ்து சாஸ்திரம் (vastu shastra) படி நாம் வாங்கும் மனையில் எந்த இடத்தில் என்ன அறை இருந்தால் நன்மை என்று இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்.

எந்த நட்சத்திரகாரர்கள் என்ன காயத்திரி மந்திரங்கள் சொல்லவேண்டும்

வாஸ்து மூலைகள் – வாஸ்து பூஜை அறை:

பூஜை அறை வாஸ்து – நாம் புதிதாக வீடு கட்டும்போது, தெய்வங்களை வழிபடவேண்டும் என்று தனியாக பூஜை அறை ஒன்றை கட்டுவோம். அந்த பூஜை அறை எங்கு இருக்கவேண்டும் என்றால்…

பொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்று ஆன்றோர்கள் பலர் சொல்கின்றார்கள். அதன் படி பார்த்தால் சூரியன் கிழக்கு திசையில் தான் உதயமாகிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் வாஸ்து பூஜை அறை அமைப்பது வாஸ்து படி விஷேஷம் ஆகும்.

பொதுவாக வடகிழக்கு மூலையில் வாஸ்து பூஜை அறை தவிர வேறு எந்த அறையும் இருக்க கூடாது (ஹால் இருக்கலாம்). அப்படி வேறு ஏதாவது அறைகள் இருந்தால் அந்த அறையில் தங்குவது உசிதம் அல்ல.

Vasthu Shastra – சமையலறை வாஸ்து

வீட்டில் சமையலறை வாஸ்து மூலைகள் ஆன அக்கினி பகவான் மூலையில் அதாவது தென்-கிழக்கு திசைகளில் தான் அமைக்க வேண்டும்.

சமையலறை அமைப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதியாகும். இந்த வாஸ்து சாஸ்திரம் (vastu shastra) படி சமையலறையை அமைப்பதினால் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும்.

எக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக்கூடாது,அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம்.

ஆகவே ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..!

வாஸ்து மூலைகள் – படுக்கை அறை வாஸ்து சாஸ்திரம் (vastu shastra) :

வாஸ்து சாஸ்திரம்(vastu shastra) படி வீடு கட்ட வேண்டியது மிகவும் அவசியம், உதாரணத்திற்கு மனிதர்கள் பகலில் ஊரெல்லாம் ஓடி ஓடி உழைத்தாலும் இரவில் ஒரே அறையில் தான் படுத்து உறங்குகின்றனர்.

ஒரு நாளில் குறைந்தது 10 மணி நேரம் வரை உறங்குகின்றனர். படுக்கை அறையானது வாஸ்துப்படி அமைப்பதே சிறந்தது. ஒரு வீட்டின் படுக்கை அறையானது தென்மேற்கு திசையில் இருப்பதே மிகவும் நல்லது.

வாஸ்து பீரோ அறை – Bero vastu in tamil:

Vastu direction for bero in tamil:-  ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு.

பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால் தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை. எனவே நாம் சம்பாதிக்கும் பணத்தை என்னதான் நம் வீட்டில் சேமித்து வைத்தாலும், சேமிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்று யாருக்கும் தெரியாது.

நாம் வீட்டில் பீரோ, வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில், பீரோவை வைத்தோம் என்றால் கண்டிப்பாக நம் வீட்டில் செல்வம் பெருக்காது.

எனவே வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பீரோ மற்றும் பெட்டிகளை வாஸ்து மூலைகள் ஆன தென்மேற்கு மூலையில் வைத்தால் மிகவும் சிறந்தது.

இது போன்ற ஆன்மிக தகவல்களை பெற நம் பொதுநலம் பார்வையிடுங்கள். தங்களுக்கு இந்த தகவல் பிடித்தால் லைக் செய்யுங்கள், தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…

வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்