படுக்கைறையில் வைக்க வேண்டிய செடி
வீட்டில் செடிகள் வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதனால் பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சில பேர் வீட்டின் பின்புறம் இடம் இருந்தால் வளர்ப்பார்கள். பின்புறம் இடம் இல்லாதவர்கள், முன்புறம் அல்லது மொட்டை மாடியில் செடிகளை வளர்ப்பார்கள். பூச்செடிகள் மட்டுமில்லை காய்கறி செடி போன்றவையும் வளர்ப்பார்கள். இந்த செடிகளை வளர்ப்பதால் அவர்களின் மனதிற்கு பிடித்தமான விஷயமாக இருக்கும். மேலும் இவர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போதும் சரி கஷ்டமாக இருக்கும் போதும் சரி பூச்செடிகளை சென்று பார்ப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் அதனை சென்று பார்வையிடுவார்கள். இதில் ஹாலில் வளர்க்கும் செடி, பெட்ரூமில் வளர்க்கும் செடி என்று உள்ளது. அதனால் இந்த பதிவில் பெட்ரூமில் வளர்க்க வேண்டிய செடிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
மணிபிளாண்ட் செடி:
மணிபிளாண்ட் பெருபாலானவர்கள் வீட்டின் ஹால் அல்லது வாசலில் வைத்திருப்பார்கள். ஆனால் மணிபிளாண்ட் செடியை பெட்ரூமில் தான் வைக்க வேண்டும். பெட்ரூமில் வைப்பதால் நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. நாம் மன அழுத்தத்திலிருந்து இருக்கும் போதெல்லாம் தனிமையில் இருப்போம் அதுவும் படுக்கைறையில் தான் இருப்போம். அதுமட்டுமில்லாமல் நாம் தூங்கும் போது தான் பல எண்ணங்கள் நம்மை சூழும். அதனால் மணிபிளாண்ட் செடியை பெட்ரூமில் சூரிய வெளிச்சம் படும் இடத்தில்வைக்க வேண்டும். மேலும் இவை அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் தன்மை உடையது.
மூங்கில் செடி:
மூங்கில் செடியானது நமக்கு அதிர்ஷ்டத்தை வழங்க கூடியது, அதனால் பெட்ரூமில் எந்த அறையில் வேண்டுமானாலும் மூங்கில் செடியை வைக்கலாம். இருந்தாலும் உங்களுக்கு ஏற்றவையாக தென்கிழக்கு திசையில் வைப்பது சிறந்ததாக இருக்கும். உங்களிடம் எப்போதும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டுமென்றால் மூங்கில் செடியை வையுங்கள்.
பணத்திற்கு பஞ்சம் வராமல் இருக்க.. கற்றாழையை இந்த திசையில் வையுங்க..!
லில்லி செடி:
லில்லி செடியானது மன அமைதியை தர கூடியது, மேலும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இவை நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவுகிறது. நமது தூக்கத்தில் வரும் கெட்ட எண்ணங்களை நீக்குவதற்கும் உதவுகிறது.
லாவண்டர் செடி:
லாவெண்டர் செடியானது மன அமைதியை தர கூடியது. இவை நறுமணம் தர கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதனால் இதனை கட்டிலுக்கு அடிப்பகுதியில் வைப்பது நல்லது.
கார்டேனியா:
கார்டேனியா செடியானது வாசனை நிரம்பியது. இவை நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. இதுமட்டுமில்லாமல் தூக்கத்தையும் தூண்டுகிறது. சில பேர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தூங்குவதற்கும் நேரமாகும். அதனால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கார்டேனியா செடியை வாங்கி பெட்ரூமில் வைக்கலாம்.
இந்த செடியை வீட்டு வாசலில் வையுங்க மகாலஷ்மி வீட்டுக்குள் வருவாங்க..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |