காலணிகளை எந்த திசையில் வைக்க கூடாது.? எந்த திசையில் வைக்க வேண்டும்.?
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வாஸ்து சாஸ்திரத்தின்படி காலணிகளை வாசலில் எந்த திசையில் வைக்கக்கூடாது என்பது இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாஸ்து சாஸ்திரம் என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொன்றிற்கும் வாஸ்து சாஸ்திரம் அறிந்து தான் செய்ய வேண்டும். வீடு கட்டுவதற்கு எப்படி வாஸ்து பார்க்கிறமோ அதேபோல் மற்றவைகளுக்கும் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது மிகவும் அவசியம்.
செருப்பு, ஷூ போன்றவற்றை வீட்டில் வைக்கும் முறை என்று ஒன்று இருக்கிறது. வாஸ்துப்படி அதனை முறைப்படி தான் வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் அபசகுனம் என்று பெரியவர்கள் கூறி கேட்டு இருப்போம். கலீல் அணியும் செருப்பு, ஷூ போன்றவற்றை வீட்டிற்குள் வெளியில் வைக்கும்போது வாஸ்துப்படி, அதனை எப்படி வைக்க வேண்டும்.? எப்படி வைக்க கூடாது.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
காலணி வாஸ்து:

காலணிகளை வைக்கக்கூடாத திசை:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலணிகளை வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசையில் வைத்தால் வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்க செய்யும். வடக்கு அல்லது கிழக்கு திசையில் செருப்புகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.இந்த திசையில் செருப்புகளை கழற்றினால் லக்ஷ்மி தேவி கோபமடைவாள் என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் குறையும். பணவரவு இருந்தாலும் தேவையற்ற செலவுகள் வந்துகொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்.
குறிப்பாக வடகிழக்கு திசையில் தப்பி தவறிக்கூட செருப்புகளை விட கூடாது. இது பணப்பிரச்சனையை உண்டு பண்ணும்.
முக்கியமாக வீட்டின் பிரதான வாசலில் செருப்புகளை கழற்றக்கூடாது.
அதேபோல், காலணிகளை தலைகீழாகவும் வைக்கக்கூடாது. செருப்புகளை தலைகீழாக வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகளை உண்டாக்கும். மேலும், வறுமை நிலையை ஏற்படுத்தும். ஆகையால், செருப்புகளை தலைகீழாக வைக்கக்கூடாது.
செருப்புகளை சிதறியபடியும், அங்கும் இங்கும் கலைந்தபடியும் செருப்புகளை கழற்றிவிட கூடாது.
நடக்கும் பாதையை அடைத்தபடியும் மறைத்தபடியும் செருப்புகளை விட கழற்றி விட கூடாது. செருப்புகளை வீட்டின் உள்பக்கம் கொண்டு வர கூடாது. வீட்டின் வெளிப்பக்கம் மட்டுமே விட வேண்டும்.
அறுந்துபோன அல்லது பயன்படுத்தப்படாத பழைய செருப்புகளை வீட்டில் வைத்திருக்க கூடாது. அதனை உடனே தூக்கி எரிய வேண்டும். இப்படி பழைய செருப்புகள் வீட்டிற்குள் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும்.
காலணிகளை வைக்க சரியான திசை:

வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது, தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே செருப்புகளை கழற்றி வைக்க வேண்டும்.
வெளியில் சென்றும் வீட்டிற்கு வரும்போது, செருப்பை கழற்றிவிடும்போது, எப்போது நேராக கழற்றிவிட வேண்டும்.
வீட்டில் எப்போதும் செருப்புகளை அடுக்கி தான் வைக்கவேண்டும். அடுக்கிவைக்காமல் கலைந்துபோய் அங்கும் இங்குமாய் சிதறியவாறு இருந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
செருப்பு ஸ்டாண்ட் வைக்கும் திசை:
செருப்பு ஸ்டாண்ட் வைக்கும்போது, மேற்கு திசையில் அல்லது வீட்டின் தலைவாசலுக்கு வலது பக்கம் இருக்குமாறு பார்த்து வையுங்கள். மேற்கு திசையை தவிர மற்ற திசைகளில் செருப்பு ஸ்டாண்டினை வைக்கக்கூடாது. மேற்கு திசையில் வைக்க முடியாதவர்கள் வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கலாம்.
செருப்பு ஸ்டாண்டுகளை பூஜை அறை அல்லது சமையலறை சுவற்றின் அருகில் வைக்கக் கூடாது. இது வீட்டில் பணப்பிரச்சனையை கொண்டுவரும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














