Vavar Swamy Song Lyrics in Tamil | வாவர் சுவாமி பாடல் வரிகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வாவர் சுவாமி பாடல் வரிகள் (Vavar Swamy Song Lyrics in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே இந்த உலகில் தங்களது பலவகையான கஷ்டங்கள் மற்றும் தடைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் தடைகளை போக்கி நாம் நமது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு நமது முயற்சிகளுடன் நமக்கு கடவுளின் ஆசிர்வாதங்களும் வேண்டும். அதனால் தான் கடவுள்களை அவர்களது மந்திரங்கள் போற்றிகள் மற்றும் பஜனை பாடல்கள் போன்றவற்றை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் நமது மனமும் நிம்மதியாக இருக்கும் கடவுளின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் சபரிமலை ஐயப்பனின் பஜனை பாடல்களில் ஒன்றான வாவர் சுவாமி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
ஐயப்பனின் நல் முத்து மணியோடு பாடல் வரிகள்
Vavar Swamy Lyrics in Tamil:

வா இலாஹி இல்லல்லா
வாபர் முஹம்மது ஊரல்லோ
எருமேலி நங்கள் வந்தலோ
கரும்புள்ளி செம்புள்ளி இட்டலோ
மணிகண்டன் நண்பன் ஆனவரே
மாமலை மாமணீ ஆனவரே
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே
ஐயனை தேடி சென்றவரே
எதிர்த்தவர் யாரையும் வென்றவரே
இல்லாது என்றும் தந்தவரே
இஞ்சிப்பாறையில் வாழ்பவரே
எருமேலியில் குடி கொண்டவரே
வீரமும் தீரமும் கொண்டவரே
எருமேலி கோட்டையை ஆண்டவரே
முன்னும் பின்னும் துணை வருவீரே
கன்னிமார்களை காத்திடுவீர்
உன்னிடம் நாங்கள் வந்திடுவோம்
பேட்டை துள்ளி ஆடிடுவோம்
வாபர்சாமி திந்தக்கதோம்
ஐயப்பசாமி திந்தக்கதோம்
முழுமுதற் கடவுளான விநாயகரின் பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்
| வாவர் சுவாமி பாடல் வரிகள் |
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |














