வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் பங்குனி உத்திரம் மந்திரம்

Updated On: April 9, 2025 1:16 PM
Follow Us:
vazhkaiyai maatrum panguni uthiram sivan manthiram
---Advertisement---
Advertisement

பாவங்களை நீக்கும் பங்குனி உத்திரம் மந்திரம்

திருமண வாழ்வில் பிரச்சனைகள் இருப்பவர்கள், திருமண பந்தத்தில் புதிதாக இணைய வேண்டும் என்று காத்திருப்பவர்கள் அனைவரும் பங்குனி உத்திர நன்னாளில் முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்து வழிபாடு செய்தால், நிறைவான மண வாழ்க்கை அமையும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இந்த நாளில் முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் குறிப்பிட்ட மந்திரத்தை கூறுவதன் மூலம் வாழ்க்கையில் சகல பாக்கியங்களும் கிடைக்கும். அது என்னென்ன மந்திரம் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

வாழ்க்கையை மாற்றும் மந்திரம்:

பாவங்களை நீக்கும் பங்குனி உத்திரம் மந்திரம்

பங்குனி உத்திரம் என்றாலே நினைவிற்கு வருவது முருகன் தான். இந்த நாள் முருகனுக்குரிய நாளாக மட்டும் தான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நாளானது சிவபெருமானுக்கும், பார்வதி அம்மனுக்கும், பெருமாளுக்கும், லட்சுமிதேவிக்கும் உரிய நாளாக இருக்கிறது. இந்த நாட்களில் பல கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். அப்படிப்பட்ட இந்த நாட்களில் நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு உரிய மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

திருமணம் நடக்கும் பொழுது அன்றைய தினம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்படி மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் என்ன கேட்டாலும் அதனை கொடுப்பார்கள். ஆகையால் இன்றைய தினம் கடவுளுக்கும் பொருந்தும் அல்லவா.! இந்த நாளன்று கடவுளிடம் மனமுருகி வேண்டினால் கேட்ட வரன் கிடைக்கும். அப்படி கேட்ட வரன் கிடைக்க கூடிய மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

“ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சிவயநம”

பங்குனி உத்திரம் 2025-ல் எப்போது? அதற்கான நேரம்

எப்படி கூற வேண்டும்:

பங்குனி உத்திரம் நாளன்று ஏப்ரல் 11-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளன்று அதிகாலையிலே எழுந்து குளித்து விட்டு பல் துலக்கி விட்டு குளிக்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது. ஏனென்றால் எந்த மந்திரங்கள் கூறுவதாக இருந்தாலும் சரி அல்லது விரதம் எடுப்பதாக இருந்தாலும் சரி வீட்டை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு அப்புறம் தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டும் என்று சம்பிரதாயம் இருக்கிறது. ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள மந்திரத்தை கூறுவதற்கு அப்படி எந்த சம்பிரதாயமும் கிடையாது.

மனதை தூய்மையாக வைத்திருந்தாலே போதுமானது. மேலும் மனதை ஒருநிலைப்படுத்தி சிவனை முழுமனதாக நினைத்து வேண்டி கொள்ளுங்கள். நீங்கள் எழுந்ததும் கண் விழித்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து மேல் கூறியுள்ள  மந்திரத்தை 5 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதால் சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now