வீடு கட்ட உகந்த மாதம் எது தெரியுமா.?

Advertisement

எந்த மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் என்ன பலன்

வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதவாது ஒரு வீடு சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. சொந்த வீட்டில் இருப்பவர்கள் இன்னொரு வீடு கட்டி அதனை வாடகைக்கு விடலாம் என்று நினைப்பார்கள். இப்படி அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பலரும் பணத்தை சிறுக சிறுக சேமிக்கிறார்கள். சேமித்த பணத்தில் வீட்டை கட்டுவதற்காக நல்ல நாளை பார்த்து கொண்டிருப்பார்கள். இப்படி பார்க்கும் போது நல்ல நாளை பார்த்து விட்டு தான் கட்ட ஆரம்பிப்பார்கள். வருடத்தில் உள்ள 12 மாதங்களில் வீட்டை கட்டினால் ஒவ்வொரு பலன் இருக்கும். அதனை இந்த பதிவில் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.

எந்த மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் என்ன பலன்:

 புதிய வீடு கட்ட உகந்த மாதம்

நீங்களே உங்கள் ஊரில் பார்த்திருப்பீர்கள், சில பேர் வீட்டை கட்ட ஆரம்பித்திருப்பார்கள் ஆனால் அதனை முடிப்பதற்குள் பல போராட்டங்கள் நடக்கும். வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்ற பழமொழி இருக்கிறது. இவை இரண்டும் ஈஸியான வேலை இல்லை. அதனால் நீங்கள் வீட்டை கட்ட ஆரம்பித்து தள்ளாடுவதை விட அதனை கட்டுவதற்கு முன்பே ஆலோசிக்க வேண்டும். அதாவது நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் மாதத்தை பொறுத்து அதன் பலன்கள் காணப்படும். அதனை தெரிந்து கொண்டு வீட்டை கட்ட ஆரம்பியுங்கள்.

  • சித்திரை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீண் செலவு உண்டாகும்.
  • வைகாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் செயலில் ஜெயம் ஏற்படும்.
  • ஆனி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் மரண பயம் ஏற்படும்.

வாஸ்து நாட்கள்

  • ஆடி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நோய் உண்டாகும்.
  • ஆவணி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்பட்டு சுபிட்சம் உண்டாகும்.
  • புரட்டாசி மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்.
  • ஐப்பசி மாதத்தில் வீடு கட்டினால் உறவினரால் கலகம் உண்டாகும்.
  • கார்த்திகை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் கிடைக்கும்.
  • மார்கழி மாதத்தில் வீடு கட்டினால் வீடு கட்ட ஆரம்பித்தால் சுவர் எழுப்ப முடியாமல் தொடர்ந்து தடைகள் வந்த வண்ணம் இருக்கும்.
  • தை மாதத்தில் வீடு வீடு கட்ட ஆரம்பித்தால் கடன் சுமை அதிகரிக்கும் தவிர அக்கினி பயம் உண்டாகும்.
  • மாசி மாதத்தில் வீடு கட்டினால்சகல சௌபாக்கியம் கிடைக்கும்
  • பங்குனி மாதத்தில் வீடு  கட்ட ஆரம்பித்தால் பொன், பொருள், பண விரயம் உண்டாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement