வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றி வழிபட்டால் நல்லது நடக்கும்..?

Veetil Ethanai Vilakku Etra Vendum

Veetil Ethanai Vilakku Etra Vendum..! 

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் விளக்கு ஏற்றுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கப் போகிறோம். அனைத்து வீடுகளிலும் கட்டாயம் விளக்கு ஏற்றுவார்கள்.

சில வீடுகளில் நல்ல நாள் மற்றும் விசேஷ நாள்களில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். சில வீடுகளில் தினமும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். அதுபோல விளக்கு ஏற்றும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

இதையும் பாருங்கள் —>  விளக்கு ஏற்றுவதில் உள்ள முக்கியமான விஷயங்கள்

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்: 

அனைவருக்குமே தன் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். அந்த கால கட்டத்தில் நம் மூதாதையர்கள் பூஜை அறையிலும், நில வாசலிலும் மற்றும் வீட்டின் பின் வாசலிலும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர்.

சில வீடுகளில் மாடங்களிலும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் நகர பகுதியில் உள்ளவர்களுக்கு விளக்கு ஏற்றுவது என்பது சிரமமான விஷயமாக உள்ளது.

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு என விளக்குகளில் பல வகைகள் உள்ளன.

விளக்குகளில் இத்தனை வகைகள் இருந்தாலும் நாம் நம் வீட்டில் ஒரு சிறிய அகல் விளக்கு  ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தாலே நல்லது நடக்கும்.

பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்: 

இறைவனை வழிபடும் போது பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வழிபடாமல் 2 விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். பூஜை அறையில் இரட்டை விளக்கு ஏற்றி வழிபட்டு வருவதால் வீட்டில் நன்மை உண்டாகும். மேலும் செல்வ வளம் பெருகும்.

அதேபோல எப்பொழுதும் பூஜை அறையில் 2 விளக்கு எரிந்து கொண்டிருப்பது  நல்லது. இதனால் நோய் இல்லாத வாழ்க்கை கிடைக்கும். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருவதால் எண்ணற்ற பலன் கிடைக்கும்.

அதேபோல நில வாசலிலும் விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். நில வாசலில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருவதால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்று கூறுவார்கள். அதனால் நில வாசலிலும் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

அதுபோல நாம் ஏற்றும் விளக்கு எப்பொழுதும் கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்