வீட்டில் இருக்க கூடாத பொருட்கள்
பொதுவாக வீடு கட்டுவது நம் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வாஸ்து சாஸ்திரம் படி தான் வைத்திருப்போம். மேலும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது போல சில பொருட்கள் இருந்தால் ராசியாக இருக்கும் என்று வைத்திருப்பார்கள். நம் முன்னோர்களின் ஞாபகமாகவும் வைத்திருப்பார்கள். ஆனால் சில பொருட்களை வைத்திருப்பது நமக்கு பண கஷ்டம் வந்து கொண்டே இருக்குமாம். அதனால் இந்த பதிவில் வீட்டில் இருக்க கூடாத பொருட்களை என்னென்னெ என்று தெரிந்து கொள்வோம்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள்:
நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை ஞாபகமாக வைத்திருப்பது நல்லது தான். ஆனால் அவை நல்ல நிலையில் இருந்தால் வைத்து கொள்ளலாம். அதுவே உடைந்த நிலையில் இருந்தால் அதனை வைத்து கொள்ள கூடாது. இதனை வைத்திருப்பதால் வீட்டில் செல்வம் இருக்காது.
காய்ந்த செடிகள்:
காய்ந்த செடிகளை வீட்டில் வைத்திருக்க கூடாது. இதனை வைத்திருப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கும், அதனால் இவற்றை நீக்கி விடவும். அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணைகளில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் வறுமையை உண்டாக்கும்.
துருப்பிடித்த பொருட்கள்:
துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் போன்றவைகள் இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும். மேலும் ஓடாதகடிகாரம் இருந்தால் வீட்டில் கடன் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
வாஸ்துப்படி பெட்ரூமில் இந்த பொருட்களை வைக்காதீங்க
உடைந்த பொருட்கள்:
உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள், பயன்படுத்தாத பழைய துணிகள், போன்றவற்றை கண்டிப்பாக வீட்ல வைத்திருக்கக்கூடாது. அதனால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடவேண்டும். இதனால் வீட்டில் எதிற்மறை ஆற்றல் உருவாகும்.
செடிகள்:
உங்கள் வீட்டில் வாசல் பகுதியில் அல்லது உள்பக்கமோ அழகிற்காக செடிகளை வளர்ப்போம். அச்செடிகளின் தலையானது கீழ் பக்கம் கவிழ்ந்து இருப்பது போல இருக்க கூடாது.
இப்படிப்பட்ட பூக்கள், அதாவது தலை கவிழ்ந்து சோகமாக இருக்கக் கூடிய பூக்களானது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இதற்கு பதிலாக நீங்கள் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில், தண்ணீர் நிரப்பி அதன் உள்ளே வெற்றிலையை காம்போடு மூழ்க வைத்து, வரவேற்பறையில் வைத்திருந்தால் பார்ப்பவர்களுடைய கண்கள், வெளிப்படுத்தும் பொறாமை, கண்திருஷ்டி இருந்தாலும் அது, நம்மை விட்டு நீங்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |