Veetil Kadan Thollai Neenga Pariharam
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான எண்ணம் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை இருக்கும். இவ்வாறு இருக்கும் விதிமுறைகளில் கடன் வாங்கவே கூடாது என்பதும் ஒரு ஐதீகமாக வைத்து இருப்பார்கள். ஆனால் இவ்வாறு மனதில் நினைத்தாலும் கூட ஏதோ ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. சரி நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்த பிறகு மீதம் இருக்கும் பணத்தினை வைத்து கடனை அடைக்கலம் என்றாலும் அதற்கான நேரம் கிடைக்காமலே போகும். அதற்கு அன்றாடம் நாம் செய்யும் ஒரு சில செயல்களும் கூட காரணமாக அமைகிறது. ஆகவே வீட்டில் கடன் தீர்ந்து செல்வம் சேர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம் வாங்க..!
கடன் தீர்ந்து பணமழை பொழிய சர்க்கரையுடன் இந்த பொருளை மறைத்து வையுங்கள்
கடன் தொல்லை நீங்க என்ன செய்வது:
நம்முடைய வீடுகளில் சில தவறுகளை செய்வதும் கடன் தொல்லையை அதிகரிக்க செய்யும். ஆகையால் போதுமான அளவு அவற்றை தவிர்ப்பது நல்லது. எனவே அது என்னென்ன செயல்கள் என்று பார்க்கலாம் வாங்க..!
- காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் வீட்டு ஜன்னல் அல்லது பின்புற கதவை தான் திறக்க வேண்டும். பின்பு கிரக லட்சுமி என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லவிட்டு கதவை திறங்கள்.
- ஏனென்றால் இவ்வாறு செய்வதன் மூலம் மகாலக்ஷ்மி அம்மையார் பசுவுடன் நமது வீட்டிற்கு வந்து அருள் புரிவார்கள்.
- அதேபோல் தினமும் வாசல் தெளித்து கோலம் போடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைய்யுங்கள்.
- மேலும் வீட்டில் தினமும் குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றுங்கள். அதேபோல் பூஜை அறையில் காய்ந்த மலர்கள் இருந்தால் அதனை உடனே எடுத்து விட வேண்டும். ஏனென்றால் காய்ந்த மலர்களை எடுக்காமல் இருப்பதும் கஷ்டத்தை அளிக்கும்.
- குடும்பத்தில் யார் ஒருவர் யார் வெளியில் சென்று வந்தாலும் முதலில் கால் கழுவி விட்டு தான் உள்ளே வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவானின் தாக்கம் ஆனது குறையும்.
- மாலை நேரங்களில் பால், தயிர், சுண்ணாம்பு, தீக்குச்சி என இந்த பொருட்களை எல்லாம் பிறருக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
எனவே மேலே சொல்லப்பட்டுள்ள முறையினை எல்லாம் பின்பற்றி கடன் தீர்ந்து வீட்டில் செல்வம் சேருவதற்கான முயற்சியினை செய்து வர வேண்டும். அப்போது தான் பணம் சேரும்.
என்றும் வற்றாத பண வரவிற்கு 1 கைப்பிடி மிளகை இந்த இடத்தில் வையுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |