Veetil Kuruvi Koodu Kattinal Enna Palan | குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் (Veetil Kuruvi Koodu Kattinal Enna Palan) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பலபேர் வீட்டில் குருவி வீடு கட்டி இருக்கும். இதனால், நம்மில் பலபேருக்கு குருவி வீட்டில் வீடு கட்டுவது நல்லதா.? கெட்டதா.? என்று தெரியாது. ஆகையால், உங்கள் குழப்பத்தினை போகும் விதமாக இப்பதிவு அமையும்.
பெரும்பாலும் பலபேர் வீட்டில் குருவி கூடு கட்டி இருக்கும். இந்த குருவி ஏன் வெளியில் அவ்வளவு இடம் இருந்தும் வீட்டிற்குள் வந்து கூடு காட்டுகிறது என்று யோசித்து இருப்போம். ஆனால் உண்மையாகவே குருவி நம் வீட்டிற்குள் வீடு கட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்னவென்று தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். பொதுவாக நடக்கின்ற ஒவ்வொரு செயல்களும் நமக்கு ஒவ்வொரு பலனை அளிக்கிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் வீட்டிற்குள் குருவி கூடு கட்டினால் என்ன பலன் கூறப்படுகிறது என்று இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளாலாம் வாங்க.
குளவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்..!
குருவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்..?
பறவைகளுக்கு உணர்வுத்திறன் அதிகமாக இருக்கும். எனவே இது ஒரு இடத்தில் கூடு கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் தனது குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்குமா..? இந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறதா..? என்பதை ஆராய்ந்த பிறகு தான் கூடு காட்டவே தொடங்கும். அதாவது நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே குருவி கூடு கட்டும்.
எனவே, எந்த ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கிறதோ அந்த வீட்டில் தான் குருவி கூடு கட்டும். அதாவது அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்கும், தீயசக்திகள் இருக்காது, வீட்டில் சண்டைகள் இருக்காது மற்றும் செய்வினை இருக்காது. இந்த அனைத்தும் இல்லாத வீட்டில் தான் குருவி கூடு காட்டும்.எனவே, வீட்டில் குருவி கூடு கட்டினால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நேர்மறை எண்ணத்துடன் தெய்வீக சக்தியுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் என்பதையே குறிக்கிறது.
மேலும், உங்களுக்கு எந்தவகையிலும் நஷ்டம் ஏற்படாது என்பதையும் உணர்த்துகிறது. எனவே வீட்டில் குருவி காட்டினால் மிகவும் நல்லது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
வெளவால் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |