வீட்டில் லட்சுமி கடாட்சம் வர என்ன செய்ய வேண்டும்
ஒருவருடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் என்பது நிறைந்து இருந்தாலே அந்த வீட்டில் செல்வம் செழித்து மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது உண்டாகும் என்று கூறுவார்கள். அந்த வகையில் சிலரது வீட்டில் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், வீட்டில் நிறைய பரிகாரங்களை செய்தாலும் லட்சுமி கடாட்சம் என்பது நிறைந்து இருக்காது. இவ்வாறு காணப்பட்டால் வீட்டில் பணம் என்பது சேராமல் அதிகப்படியாக செலவாகி கொண்டே தான் போகும். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன தான் செய்வது என்பது பலரது பிரச்சனையாக இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
எப்பேர்ப்பட்ட கடனும் அடைய ஆடி வெள்ளி அன்று இதை மட்டும் செய்யுங்க..
லட்சுமி வீட்டில் தங்க:
முதலில் காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் இடவேண்டும். அது முக்கியமான தெய்வ அம்சமாக உள்ளது. ஏனென்றால் வீட்டிற்குள் தெய்வம் வருகிறது என்றால் அதனை வரவேற்கும் விதமாக பார்ப்பது கோலம் தான். ஆகவே கோலம் இடவேண்டும்.
இதனை தொடர்ந்து வீட்டின் முன் பக்கம் அதாவது வாசல் பக்கம் கற்பக விநாயகர் அல்லது நிலைக்கண்ணாடி இரண்டும் ஏதோ ஒன்று மாட்டி வைக்க வேண்டும். மேலும் இப்படி செய்வதால் வீட்டிற்குள் வருபவர்கள் பார்க்கும் கெட்ட எண்ணங்கள் அழிந்து வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும்.
லட்சுமி படம்:
அதேபோல் உங்கள் வீட்டை பார்த்தபடி மகாலட்சமி படம் வைக்க வேண்டும். ஏனென்றால் மகாலட்சமி எப்போதும் நம்மை பார்த்தபடி தான் இருக்க வேண்டும்.
உங்களுடைய வீட்டில் குறிப்பாக பூஜை அறை சமையல் அறை இரண்டு இடமும் எப்போதும் நறுமணத்துடன் இருக்க வேண்டும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது அங்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். நறுமணத்துடன் இருப்பதற்கு ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி என்று பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் வீட்டில் வரும் சுமங்கலி பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது குங்குமம் கொடுக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை அன்று நாணயம் வைத்து அர்ச்சனை செய்து அதனை தட்டில் வைத்து வழிபட்டால் நல்லது.
கடன் தொல்லை தீர ஆடி முதல் நாள் உப்பு ஜாடியில் இதை மட்டும் மறைத்து வையுங்கள் |
சமையலறை:
வீட்டில் சமையல் அறையில் ஊறுகாய், உப்பு இந்த இரண்டு பொருளும் நிறைந்திருக்க வேண்டும். ஊறுகாய் குபேரனுக்கு மிகவும் பிடித்த பொருள்.
அதனால் இவை நிறைந்து இருந்தால் அவர் உங்கள் வீட்டில் குபேரர் பார்வை இருக்கும். அதேபோல் உப்பு மகாலட்சமிக்கு உகந்த பொருள் ஆகவே இந்த இரண்டு பொருளும் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |