Veetil Panam Athikarikka Pariharam in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்பட்டது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவை தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்றும் நமக்கு சரியாக கிடைத்து நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் நாமல் இயன்ற அளவிற்கு சமபதிப்போம். ஆனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் அது நம்மிடம் இருக்காது. அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் பணம் பெருக உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன பரிகாரம் என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன் பெறுங்கள்.
50 ஆண்டுகளுக்கு பிறகு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் இனிமேல் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா
வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்..?
இன்றைய சூழலில் பணம் தான் அனைத்து இடங்களிலும் முதன்மையாக உள்ளது. அதனால் அந்த பணத்தை நம் வசத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் நாம் அனைவரிடமும் உள்ளது.
அதனால் தான் மிகவும் எளிமையான பரிகாரத்தின் மூலம் நமது வீடுகளின் பணவரவை அதிகரித்து கொள்வதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:
- 1 ரூபாய் நாணயம் – 1
- 5 ரூபாய் நாணயம் – 1
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 3
- விரலி மஞ்சள் – 2
- பட்டை – 1
- அன்னாசி மொக்கு – 3
- கண்ணாடி கிண்ணம் – 1
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கண்ணாடி கிண்ணத்தில், 1 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நாணயம், 3 கிராம்பு, 3 ஏலக்காய், 2 விரலி மஞ்சள், 1 பட்டை மற்றும் 3 அன்னாசி மொக்கு ஆகியவற்றை வைத்து உங்கள் வீட்டின் பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளை காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள பொருட்களை நீரிலோ அல்லது காலடி படாத இடத்திலோ கொட்டிவிடுங்கள்.
இந்த பரிகாரத்திக்கு பயன்படுத்திய 5 ரூபாய் மற்றும் 1 நாணயத்தை யாருக்காவது தானம் செய்து விடுங்கள். அப்படியில்லை என்றால் உங்கள் வீட்டின் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.
செல்வ செழிப்பை அதிகரிக்க கல் உப்பில் இதை மட்டும் மறைத்து வையுங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |