Veetil Panam Peruga
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகள் இருக்கும். அவ்வாறு நமது மனதில் உள்ள பலவகையான ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம் தான். அதிலும் இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் பணம் என்னிடம் அதிக அளவு சேரவும் மாட்டேங்கிது சேர்ந்தாலும் சீக்கிரத்தில் செலவாகி விடுகின்றது என்று கவலைப்படுபவரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் எளிமையான முறையில் பணவரவை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை செய்து உங்கள் வீட்டின் பணவரவையும் அதிகப்படுத்தி பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
சிம்மத்தில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா சூப்பரா மாற போகுது
வீட்டில் பணம் தங்க பரிகாரம்:
இன்றைய காலகட்டத்தில் மனிதனை வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்களில் ஒன்று தான் இந்த பணம். அப்படிப்பட்ட பணத்தை நமது வீட்டில் எல்ல நேரத்திலும் இருந்து கொண்டே இருப்பதற்கு உதவும் ஒரு எளிமையான பரிகாரம் ஒன்றை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
இந்த பரிகாரம் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் வாங்க.
- மண்சட்டி – 1
- கண்ணாடி – 1
- மல்லிகை பூ – சிறிதளவு
- நாணயங்கள்
போதும் போதும் என்கின்ற அளவு பணம் சேர ஆடிப்பெருக்கு அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள மண்சட்டியில் பாதியளவு நாணயங்களை போட்டு வைத்து கொள்ளுங்கள். பிறகு அதன் மேற்புறத்தில் கண்ணடியை வைத்து அதில் அந்த நாணயங்கள் தெரியும்படி வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதற்குமல்லிகை பூக்களினால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இதற்கு தொடர்ந்து தினமும் காலையில் நீங்கள் பூஜை செய்யும் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 04.00 மணி முதல் 06.00 மணிக்குள் தயார்படுத்தி பூஜை செய்ய தொடங்க வேண்டும். மேலும் இந்த பூஜையை தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும்.
இதனால் உங்கள் வீட்டில் ஏற்படும் வீண்செலவுகள் அனைத்தும் குறைந்து பணவரவு அதிகரிக்கும்.
ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை டாப் கியரில் செல்ல போகுது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |