Veetil Panam Sera Enna Seivathu Tamil | ஆடி வெள்ளி பரிகாரம்
இன்றைய காலகட்டத்தில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது வாழ்க்கையை மிக மிக செளகரியமாக நடத்தி செல்வதற்கு பயன்படுவது பணம் தான். அதனால் அனைவருமே இந்த பணத்தை மிக மிக கஷ்ட்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள். ஆனாலும் அது நம்மிடம் நிலையாக இருப்பதில்லை. மேலும் நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் இருப்பதில்லை. அதனால் நமது மனம் மிக மிக கஷ்ட்டப்படும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள அனைத்து பண கஷ்ட்டங்களையும் நீக்கி பணம் சேர உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன பரிகாரம் என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன் பெறுங்கள்.
Panam Peruga Tips in Tamil:
உங்களுக்கு உள்ள அனைத்து பண கஷ்ட்டங்களையும் நீக்கி பணம் சேர உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- இலவங்கப்பட்டை – 1
- 100 ரூபாய் பணம் – 1
- சிவப்பு நிற நூல்
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 ரூபாய் பணத்தில் நாம் எடுத்து வைத்திருந்த 1 இலவங்கப்பட்டையை வைத்து நன்கு சுற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனை சிவப்பு நிற நூலினை பயன்படுத்தி நன்கு கட்டி கொள்ளுங்கள்.
தீராத கடனும் தீர ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமை தோறும் பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்
பிறகு இதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்து கொள்ளுங்கள். பின்னர் இதனை நீங்கள் எங்கு பணம் வைப்பீர்களோ அங்கு வைத்து கொள்ளுங்கள்.
இதில் நாம் பயன்படுத்தும் இலவங்கப்பட்டையை மூன்று மாதங்களுக்கு பிறகு வரும் பவுர்ணமி அல்லது அம்மாவாசை அன்று ஒரு அகல் விளக்கில் போட்டு எரித்து சாம்பலாகிவிடுங்கள். பணத்தை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது முன்னர் போலவே பணம் வைக்கும் இடத்திலேயே கூட வைத்து கொள்ளலாம்.
பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:
இந்த பரிகாரத்தை ஆடி வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
ஆடிப் பூரத்தில் குழந்தை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |