Veetil Panam Sera Enna Seivathu
வீட்டில் பணம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும், கடலளவு காணப்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான வீடுகளில் ஒரு பெரிய பிராத்தனையாக இருக்கிறது. ஏனென்றால் எவ்வளவு தான் நாம் கஷ்டப்பட்டு பணத்தினை சம்பாதித்தாலும் கூட பணம் போகும் இடம் தெரியாமல் போய்விடும். இவ்வாறு தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தால் நாம் ஆன்மீகத்தில் ஏதேனும் பரிகாரங்கள் இருக்கிறதா என்று தான் யோசிப்போம். இத்தகைய பட்சத்தில் இன்று வீட்டில் பணம் சேர மண் சட்டியினை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வீட்டில் ஏழ்மை நிலை நீங்கி பணவரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும்
வீட்டில் பணம் சேர என்ன வழி:
வீட்டில் வரும் வீண் செலவுகள் அனைத்தும் குறைந்து பணம் சேர வேண்டும் என்றால் அதற்க்கு முதலில் ஆன்மீகத்தின் படி ஒரு பரிகாரத்தினை செய்ய வேண்டும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மண்சட்டி
- தாமரைப்பூ
- மல்லிப்பூ
பரிஹாரம் செய்யும் முறை:
முதலில் குளித்து வீட்டு பூஜை அறையினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் ஒரு மண் சட்டியினை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு அதே சட்டியில் தாமரை பூ மற்றும் மல்லிப்பூ வைக்க வேண்டும்.
இப்போது இந்த மண் சட்டியில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை அதை வைத்து சாம்புராணி போட்டு 1/2 மணி நேரம் கழித்து பணத்தினை எடுத்து கொள்ளுங்கள்.
இதைபோல் உங்களுடைய வீட்டில் தங்கம் இருந்தாலும் அதையும் இப்படி வைத்து பூஜை செய்து பிறகு எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் தினமும், வாரம் அல்லது மாதம் என சம்பாதிக்கும் பணத்தினை இவ்வாறு பூஜை செய்து வர வேண்டும்.
மேலும் நாம் மண் சட்டியில் வைக்கும் தாமரை மற்றும் மல்லிப்பூக்கள் ஆன்மீகத்தின் படி வீட்டில் வீண் விரயம் ஏற்படுவதை தடுத்து பணம் சேர வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்தோ அல்லது ஒரு முறைகூட செய்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்பினால் பூக்கள் வாடிய பிறகு அதை மாற்றி கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த கையோடு வீட்டில் பணம் சேருவதற்கான முயற்சினையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
பணம் தங்குவதற்கு பாசிப்பருப்பு மட்டும் போதும்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |