பணவரவு அதிகரிக்க அஞ்சறை பெட்டியில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்.
நம் முன்னோர்களின் காலத்தில் உணவு, உடை, இருப்பிடம் தான் முக்கியமாக தேவைப்பட்டது. இதற்காக அன்றைய நல் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் வாங்கிய பணத்தை செலவுக்கே சரியாக போகிறது, பணத்தை சேமிக்கவே முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். பணம் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக சென்று காசு கொடுத்து செலவு செய்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் பணவரவை அதிகரிக்க அஞ்சறை பெட்டியில் ஒரு பொருளை மறைத்து வைத்தால் போதுமாம். அவை என்ன பொருள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
அஞ்சறை பெட்டியில் மறைத்து வைக்க வேண்டிய பொருள்:

அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்காதீர்கள். மகாலட்சுமிக்கு ரொம்ப பிடித்தமான இடமே சமையல் அறை தான். அதனால் தான் உப்பு, அரிசி போன்றவைகளை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.
உப்பு ஜாடியை இந்த இடத்தில் வைய்யுங்க அள்ள அள்ள வற்றாத அளவில் பண வரவு ஏற்படும்..!
நீங்கள் அஞ்சறை பெட்டியில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்று தெரிஞ்சுக்கோங்க. கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, மிளகு, கடலை பருப்பு, உளுந்து போன்றவை இருக்க வேண்டும். அதுவும் பித்தளை அல்லது சில்வர் அஞ்சறை பெட்டியை பயன்படுத்துங்க.
அஞ்சறை பெட்டியில் நீங்கள் 10 ரூபாய் பணமும், ஏலக்காய் ஒன்றும் வைத்து கொள்ளவும். மேலும் ஒரு துண்டுவிரலி மஞ்சளையும் வைத்து கொள்ளவும். இதன் மூலம் பணவரவை அதிகரிக்க முடியும்.
அஞ்சறை பெட்டியில் வைக்க கூடாத பொருட்கள்:
அஞ்சறை பெட்டியில் சில பொருட்களை வைக்க கூடாதாம். ஏனென்றால் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் வீட்டில் பணவரவை அதிகரிக்க முடியாது. அவை என்னென்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம்.
ஊக்கு, மாத்திரை, மருந்து அட்டை, இரும்பு பொருட்கள், புளி, உப்பு போன்ற பொருட்களை வைக்க கூடாது.
மேலும் அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். அதவாது சுத்தமாக பொருட்களை துடைத்து விடாதீர்கள்.
கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க.. வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














