Veetil Panam Sera Tips in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல கடமைகள் மற்றும் கனவுகள் உள்ள அவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நமக்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் சிறுக சிறுக சேமித்து பயன்படுத்துவோம். அதனை தாண்டியும் நமக்கு பணம் தேவைப்படுகின்றது என்றால் நாம் மற்றவர்களிடம் தான் கடன் வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கும் நமது நிலைமை மிக மிக மோசமாகிவிடும். அதனால் தான் இன்று உங்களுக்கு உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் எளிதில் போக்க உதவும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெற்று கொள்ளுங்கள்.
கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்
Veetil Panam Sera Enna Seiya Vendum:

உங்க வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் சர்க்கரை பரிகாரம் மற்றும் அதனை செய்யும் முறை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
பரிகாரத்திற்கு தேவைபடும் பொருட்கள்:
- சர்க்கரை – தேவையான அளவு
- இலவங்கப்பட்டை – 1
- 1 ரூபாய் நாணயம் – 1
- கண்ணாடி பவுல் – 1
செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்
சர்க்கரை பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கண்ணாடி பவுல் முழுவதும் நிரம்புமாறு சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 ரூபாய் நாணயத்தை மறைத்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 இலவங்கப்பட்டையை சொருகி வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை வாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை மதியம் 01:15 முதல் 2 மணிக்குள் செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் இரவு 08:15 முதல் 9 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.
இதில் உள்ள பொருட்களை நீரிலோ அல்லது காலடி படாத இடத்திலோ கொட்டிவிடுங்கள். மேலும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திய 1 ரூபாய் நாணயத்தை நீங்கள் எப்பொழுதும் பணம் வைக்கின்ற இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் எப்போதும் குறையாத அளவு பணமிருக்க வசம்பு மட்டும் போதும்
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












