வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.! நல்ல பலன் கிடைக்கும்.!

Advertisement

Veetil Prachanai Theera

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதல்லாம் சாதரணமான ஒன்று தான். ஆனால் அப்பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்காது. குடும்பத்தில் அடுத்து அடுத்து பிரச்சனைகள் நீடிப்பதற்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்காமல் இருப்பதும் ஒரு காரணமாகும். எனவே, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டையும் தர்பணத்தையும் தவறாமல் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லமால் குடும்பத்தில் பிரச்சனைகள் தீர ஒரு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும். எனவே, அப்பரிகாரங்களில் ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

வீட்டில் சண்டை வராமல் இருக்க பரிகாரம்:

 வீட்டில் பிரச்சனை தீர

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • வெள்ளை துணி- 1
  • வெற்றிலை- நான்கு 
  • கொட்டை பாக்கு- இரண்டு 
  • பச்சரிசி- ஒரு கைப்பிடி
  • மஞ்சள் தூள்- சிறிதளவு
  • நாணயம்- ஒரு ரூபாய் 
  • விரலி மஞ்சள்- இரண்டு 
  • வெள்ளை பேப்பர்- 1

வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்த ஒரு பரிஹாரம் மட்டும் போதும்..!

பரிகாரம் செய்யும் முறை:

இப்பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

முதலில் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெயர்களை எழுதி கொள்ளுங்கள்.

பிறகு, ஒரு வெள்ளை துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் வெற்றிலை,
கொட்டை பாக்கு, பச்சரிசி, மஞ்சள் தூள், ஒரு ரூபாய் நாணயம் மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

 veetil sandai varamal iruka

இதனுடன், முன்னோர்களின் பெயர்களை எழுதி வைத்துள்ள வெள்ளை பேப்பரையும் மடித்து சேர்த்து போட்டு கொள்ளுங்கள். இப்போது, இதனை ஒரு முடிச்சு போல் போட்டு கொள்ளுங்கள்.

இம்முடிச்சியினை நீங்கள் பூஜை அறையில் வைத்து வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் பூஜை செய்வது போல் செய்ய வேண்டும்.

உங்கள் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் நினைத்து, வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, இம்முடிச்சியிற்கு தீப ஆராதனை, கற்பூரம் ஆராதனை, சாம்பிராணி தூபம் காட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் எப்போதும் வெள்ளிக்கிழமை அன்று செய்யும் பூஜையில் இம்முடிச்சியினையும் வைத்து வழிபாடு செய்து வந்தால், முன்னோர்களின் ஆசி பெற்று வீட்டில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது.

வீட்டில் உள்ள எல்லா கஷ்டங்களும் நீங்குவதற்கு தேங்காய் மட்டும் போதும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement