Veetil Selvam Peruga
நாம் அனைவருமே வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க பல முறைகளை பின்பற்றி வருவோம். அதாவது, வீட்டில் செல்வம் நிலைக்க பூஜை அறைகளை பார்த்து பார்த்து அலங்கரித்து வருவோம். ஆனால் பூஜை அறையை அலங்கரித்து வைத்தால் மட்டும் போதாது. செல்வத்தின் அம்சமாக விளங்கும் மஹாலக்ஷ்மிற்கு பிடிக்காத சில காரியங்களையும் வீட்டில் செய்யக்கூடாது. அப்படி மஹாலக்ஷ்மிற்கு பிடிக்காத காரியங்களை செய்தால் வீட்டில் மஹாலக்ஷ்மி நிலைத்து இருக்க மாட்டாள். எனவே வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க செய்யக்கூடாத காரியங்களை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
வீட்டில் செல்வ வளம் நிலைத்து இருக்க செய்யக்கூடாதவை:
தவறு 1:
வீட்டில் பூஜை செய்யும் நாட்களில் மட்டும் வெண்ணெயை வீட்டில் உருக்கக்கூடாது. நீங்கள் எண்ணெயை உருக்கினால் மஹாலக்ஷ்மி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்பது நம்பிக்கை.
வெண்ணெய் என்பது மஹாலக்ஷ்மி அம்சமாக கருதப்படுகிறது. எனவே, பூஜை செய்யும் நாட்களில் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெண்ணெயை உருக்கக்கூடாது.
ஆனால், மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படும் பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தவறு 2:
வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு பாகற்காய் சமைத்து கொடுக்கக்கூடாது என்னது நியதி. பாகற்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்தாலும் கசப்பு தன்மையுடைய பாகற்காயை விருந்தினர்களுக்கு சமைத்து கொடுத்தால் உறவு அறுந்துபோகும் என்பது நம்பிக்கை.
அதேபோல், பூஜை செய்யும்போது நெய்வேத்தியங்கள் படைக்கும்போது பாகற்காயை சேர்த்துக்கொள்ள கூடாது. கசப்பு தன்மையுடைய பாகற்காயை பூஜையில் சேர்த்து கொண்டால் மஹாலக்ஷ்மி வீட்டில் இருக்க மாட்டாள் என்பது நம்பிக்கை.
தவறு 3:
பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வீடு துடைக்கும்போது அத்தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை கலந்து துடைப்பார்கள். கல் உப்பு கலந்து துடைத்தால் வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் காணப்படும் என்பதற்காகவும், வீட்டில் பூச்சிகள் வராமல் இருப்பதற்க்காகவும் அவ்வாறு செய்வார்கள்.
ஆனால் இம்முறையை பூஜை செய்வதற்கு உகந்த நாட்களாக கருதப்படும் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு போன்ற நாட்களில் செய்யக்கூடாது. ஏனென்றால், கல் உப்பு என்பது மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருத்திய ஒரு பொருள். எனேவ, இதனை இந்த மூன்று நாட்களில் தண்ணீரில் கலந்து வீடு துடைக்கக்கூடாது.
அவ்வாறு செய்தால், மஹாலக்ஷ்மியின் கடாக்சம் வீட்டில் இருக்காது. மஹாலக்ஷ்மியின் கடாக்சம் வீட்டில் இல்லையென்றால் வீட்டில் செல்வமும் நிலைக்காது.
எனவே, வீட்டில் செல்வம் பெருகவும் நிலைத்து இருக்கவும்,மேலே கூறப்பட்டுள்ள இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.
வீட்டில் செல்வம் செழிக்க கல் உப்பை இப்படி மட்டும் பயன்படுத்துங்க போதும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |