வீட்டில் செல்வம் அதிகரிக்க
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகள் இருப்பது என்பது சாதாரணமான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஆசை என்பது கடன் எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்பு மற்றும் பண வரவு என்பதை அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அப்படி பார்த்தால் அன்று முதல் இன்று வரை வீட்டில் செல்வமோ அல்லது பணமோ அதிகரிக்க வேண்டும் என்பதற்கு முதலில் ஆன்மீகத்தில் உள்ள பரிகாரத்தை தான் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் வாரம் மற்றும் மாதத்திற்கு ஒரு முறை எனவும் இயல்பாக பரிகாரம் செய்து வருகிறார்கள். எனவே இன்று புரட்டாசி மாதத்தில் வீட்டில் செல்வம் அதிகரிக்க சர்க்கரையினை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ளல் போகிறோம்.
புரட்டாசி மாதத்தில் கடன் கொடுத்தீங்க அவ்வளவுதான்..!
வெள்ளிக்கிழமை பரிகாரம்:
வீட்டில் மஹாலஷ்மி அம்மையாரின் ஆசீர்வாதம் கிடைத்தாலே பிரச்சனைகள் அனைத்தும் விலகி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. அதனால் நீங்கள் வெள்ளைக்கிழமை அன்று பூஜை செய்யும் போது தேன் கலந்த பாயாசத்தை செய்து வழிபாடு செய்வது நல்லது.
மேலும் இதே வெள்ளிக்கிழமையில் சர்க்கரை பரிகாரம் செய்வது என்பது பணக் கஷ்டங்களை நீக்கி செல்வம் அதிகரிக்க செய்யும்.
- பீங்கான் ஜாடி- 1
- சர்க்கரை- சிறிதளவு
- பச்சை கற்பூரம்- சிறிதளவு
- கிராம்பு- 3
- ஏலக்காய்- 3
- வெள்ளை துணி- 1
சர்க்கரை என்பது சுக்கிரன் பகவானுக்கு ஏற்ற பொருளாக உள்ளது. அதனால் ஒரு பீங்கான் அல்லது கண்ணாடி பவுலினை எடுத்துக்கொண்டு அதில் சர்க்கரையினை போட்டு கொள்ளுங்கள்.
இப்போது ஒரு வெள்ளை நிறத்துணியில் எடுத்துவைத்துள்ள ஏலக்காய், கிராம்பு மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து மூட்டை போல் கட்டி சர்க்கரையில் மறைத்து வைத்து விடுங்க. கடைசியாக இதை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
இத்தகைய பரிகாரத்தை புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். மேலும் காலை 6 முதல் 7 அல்லது இரவு 8 முதல் 9 என இத்தகைய மணியில் தான் இந்த சர்க்கரை பரிகாரத்தை செய்ய வேண்டும்.
நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட்டு. வீட்டில் செல்வம் அதிகரிப்பதற்கான முயற்சியினை செய்வதன் மூலம் விரைவில் பலன் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் விரதம் எடுப்பதின் உண்மை வரலாறு தெரியுமா..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |