வீட்டில் செய்ய கூடாதது
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்பட்டது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவை தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்றும் நமக்கு சரியாக கிடைத்து நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் நாமல் இயன்ற அளவிற்கு சமபதிப்போம். ஆனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் அது நம்மிடம் இருக்காது. அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் பணம் பெருக நீங்கள் வீட்டில் என்ன என்ன செய்யவே கூடாது என்று விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன
என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன் பெறுங்கள்.
Veetil Panam Thanga Enna Seiya Vendum:
உங்க வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் சில குறிப்புகளை இங்கு காணலாம் வாங்க..
வீட்டு வாசற்படி, உரல், ஆட்டுக்கல் மற்றும் அம்மி இவைகளில் உட்காரக் கூடாது.
நீங்கள் யாரேனும் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால், வாசல் படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து, கொடுக்கவும் வாங்கவும் செய்ய வேண்டும்.
தீராத கடனும் காணாமல் போகும். ஆன்மிகம் கூறும் ரகசியம்….
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து, செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை மற்றும் பூக்களை வாட விடக் கூடாது.
வெற்றிலையை எந்த ஒரு காரணத்தினாலும் தரையில் வைக்கக்கூடாது. நீங்கள் வெற்றிலை பாக்கு பயன்படுத்துவீர்கள் என்றால் சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
பூஜையறையில் வைக்க வேண்டிய மங்களகரமான பொருட்கள்….
கல் உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தமால் பயன்படுத்த வேண்டும்.
பகலில், வீட்டினுள் குப்பபைகளை எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |