செல்வ செழிப்பை அதிகப்படுத்துவதற்கு 5 வெற்றிலை மட்டும் போதும்..

Advertisement

செல்வ செழிப்பு

மனிதனுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் பண பிரச்சனை தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பணப்பிரச்சனையால் வீட்டில்  மகிழ்ச்சி, நிம்மதி போன்றவை இருக்காது. எந்நேரமும் மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். சம்பாதிக்கின்ற பணமானது கடனை கொடுக்கவே சரியாக இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆன்மிகத்தில் சில பரிகாரங்களை செய்து வீட்டில் பண பிரச்சனையை சரி செய்து பணத்தை அதிகமாக கிடைக்க வைக்கலாம். அதற்கான பரிகாரத்தை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

செல்வ செழிப்புடன் இருப்பதற்கு பரிகாரம்:

செல்வ செழிப்பை பெறுவதற்கு வெற்றிலை, சிறிதளவு நெய், சிறிதளவு பட்டு துணி போன்றவை தேவைப்படும்.

செல்வ செழிப்பு

பரிகாரம் செய்வதற்கு முதலில் 5 வெற்றிலையை காம்புகளுடன் எடுத்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த வெற்றியலையில் அழுக்கு மற்றும் கரும்புள்ளிகள் இல்லாதவாறு எடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்து எடுத்து வைத்திருக்கும் வெற்றிலைகளில் நெய்யை தடவி கொள்ளவும். இதனை பட்டு துணியில் உள்பக்கம் வைத்து கட்டி கொள்ளவும்.

இந்த பட்டு துணியை வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் வைப்பதன் மூலம் பணவரவை அதிகரிக்கலாம்.

வீட்டில் ஏழ்மை நிலை நீங்கி பணவரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும்.!

இந்த பரிகாரத்தை புதன் கிழமை மதிய நேரத்தில் 1 மணி முதல் 2 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை முதல் வாரம் செய்து விட்டு அடுத்த வாரம் புதன் கிழமை மதிய நேரத்தில் 1 மணி முதல் 2 மணிக்குள் கட்டி வைத்துள்ள முடிச்சை அவிழ்த்து விட்டு உள்பகுதியில் இருக்கும் வெற்றிலையை மட்டும் எடுத்து விட்டு புதிதாக வேறொரு வெற்றியையில் நெய்யை தடவி அதே துணியில் வைத்து கட்டி விட்டு முன்னடி எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில் வைக்க வேண்டும்.

எடுத்த வெற்றியலையை மனிதனின் கால் பகுதி படாத இடத்தில் வைத்து விட வேண்டும். இல்லையென்றால் ஆற்றில் தூக்கி போடு விட வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வீட்டில் பணவரவு அதிகரித்து செல்வ செழிப்பை அதிகரிக்கலாம். பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி விலக கல் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைய்யுங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement