கடன் பிரச்சனை தீர
உலகில் உள்ள ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுகின்றனர். சிலர் மட்டுமே அவர்களின் பரம்பரை சொத்துக்கள் கிடைப்பது, அதன் மூலம் அவர்கள் சுக வாழ்வு வாழ்வது வழக்கமாக உள்ளது. ஒருவருக்கு பரம்பரையாக என்ன தான் அதிக சொத்துக்கள் கிடைத்தாலும், அதை முதலீடாக வைத்து உழைப்பவர்களே அந்த உச்ச இடத்தில், சுக போகங்களுடன், பணக்காரராக தொடர்ந்து இருக்க முடியும். ஆனால் கால மாற்றங்களால் உங்களின் செல்வ நிலையில் மாற்றம் ஏற்படும். எப்பேர்ப்பட்ட செல்வந்தரும் ஏழையாகலாம். ஏழைகளும் செல்வந்தர் ஆகலாம். நாம் வீட்டில் உள்ள செல்வம் நிலைத்து இருக்கவும், கடன் பிரச்சனைகளில் இருப்பவர்கள் கடன் பிரச்சனை தீர்ந்து வளம்பெறவும் சில பரிகாரங்கள் உள்ளன. உங்கள் வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருக ஒரு கைப்பிடி உப்பு போதும். வாருங்கள் அந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
கடன் பிரச்சனை தீர உப்பு போதுங்க..
உப்பு எதிர்மறை சக்திகளை வெளியேற்றி நேர்மறையான எண்ணத்தை தரக்கூடியது என சொல்லுகிறது ஆய்வுகள். கையில் உப்பை வைத்திருக்கும் பொழுது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாக சொல்கிறார்கள் அறிஞர்கள். உப்பை கையில் வைத்து கொண்டு நேர்மறையாக பேசினால் நம்மை சுற்றி நேர்மறையான எண்ணம் உருவாகுமாம்.
உப்பு பரிகாரம்:
பௌணர்னமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் பிடி அளவு உப்பை வைத்துக்கொண்டு, சூரியன் உதிக்கும் திசையை பார்த்து அமர்ந்து, கைகளை தொடையில், உள்ளங்கை மேல் நோக்கி வைத்து இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களின் கடன்பிரச்சனைகள் தீரவேண்டும் செல்வம் பெருக வேண்டும் என நீங்கள் மனதில் நினைத்தால், நீங்கள் வேண்டுவதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.
வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்திகளை விரட்டவும், இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் செய்யலாம்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, அதன் மேல் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து, 4 காய்ந்த மிளகாய்களை எடுத்து, அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் வைத்து, இதனை தலைவாசல் கதவின் உட்புறப் பகுதியின் மூலையில் வைக்க வேண்டும்.
மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் இந்த மூன்று பொருள்களையும் ஓடும் நீரில் விட்டு விடலாம்.
இவ்வாறு செய்வதால் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து உங்களின் செல்வநிலை உயரும்.
புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள்….அவை தரும் பலன்கள்…
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |