வீட்டில் எப்போதும் குறையாத அளவு பணமிருக்க வசம்பு மட்டும் போதும்..

Advertisement

வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்க 

பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும். வீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும் தங்காது என்று புலம்புகிறவர்கள் தான் அதிகம். பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும். வாருங்கள் அப்படி என்ன பரிகாரம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க:

வசம்பு மட்டும் போதும் பணம் வரவு அதிகரிக்க:

வசம்புக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி உள்ளது. நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் அதாவது பீரோ, பர்ஸ் போன்றவைகளில் இந்த வசம்பை வைக்கலாம். அல்லது வீட்டு பூஜை அறையில், கிச்சனில் உள்ள உப்பு ஜாடி, அரிசி வைத்துள்ள இடங்களில் நீங்கள் வசம்புவை வைக்கலாம்.

vittil pana varavu athikarikka parikaram in tamil

500 ரூபாய் நோட்டு அல்லது ஏதோ ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த ரூபாய் நோட்டை பூஜை அறையில் வைத்து கடன்பிரச்னைகள் தீரவேண்டும் என்றும், செல்வம் பெருக வேண்டும் என்றும் வணங்குங்கள். பிறகு வசம்புவை அந்த ரூபாய் நோட்டில் வைத்து நன்றாக சுருட்டிக் கொள்ளுங்கள். அந்த வசம்பு மற்றும் ரூபாய் நோட்டை மஞ்சள் அல்லது பச்சை நூல்கொண்டு கட்டி  உப்பு ஜாடி அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் கண்ணிற்கு தெரியாதவாறு வைக்கவும்.

இவ்வாறு செய்யும் போது வீட்டில் பணவரவு அதிகரிக்கும். செலவுகள் குறையும் பணம் வீட்டில் தங்கும். பீரோக்களில் வைக்கும் வசம்பை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம். உப்பு ஜாடியில் வாக்கும் வசம்பை வாரம் ஒரு முறை மற்ற வேண்டும்.

கல் உப்பானது மகாலெட்சுமியின் மறு அம்சமாக எண்ணப்படுகிறது. அதனால் உப்பு ஜாடியில் வசம்பை வைப்பதால் மஹாலக்ஷ்மி எப்போதும் உங்களுக்கு செல்வத்தை  அள்ளித் தருவாள்.

காலையில் எழுந்ததும் வீட்டுக்கதவை திறக்கும் போது, மகாலஷ்மியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலஷ்மியின் அருள் கிடைக்கும்.

பல முன்னேற்றங்களை தரும் ஆவணி மாதம் …ஆவணி மாத ராசிபலன்கள் 2023…

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement