வீட்டில் செல்வ சேர என்ன செய்ய வேண்டும்
வீட்டில் வாழும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை என்பது மிகவும் இன்றையமையாது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அந்த வகையில் இவை இரண்டும் முக்கியமானதாக இருந்தாலும் கூட பணம் மற்றும் செல்வம் என இந்த இரண்டும் முக்கியமானதே. ஏனென்றால் நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றாலும் பணம் தான் தேவைப்படுகிறது. அதனால் இன்றைய பதிவில் வீட்டின் செல்வ செழிப்பை அதிகரிக்க செய்ய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது எப்படி என்று தான் பார்க்கபோகிறோம். மஞ்சள் என்பது சமையலில் சேர்க்கப்படும் ஒரு பொருளாக இருந்தாலும் கூட இது ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டுள்ளது. சரி வாருங்கள் பதிவை படித்து என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்..!
வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்:
குறிப்பு- 1
முதலில் 2 ஸ்பூன் மஞ்சளை எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் கரைத்து வீட்டு வாசலில் தெளித்து வருவதன் மூலமாக உங்களுடைய வீட்டின் மீது ஏதேனும் கண் திருஷ்டி ஆனது இருந்தால் அது உடனே நீங்கி விடும் என்பது ஒரு ஐதீகம்.
குறிப்பு- 2
- மஞ்சள்- சிறிதளவு
- மஞ்சள் துணி- 1
அதற்கு அடுத்த நிலையாக சிறிதளவு மஞ்சளை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு மஞ்சள் துணியில் அதனை கட்டி பீரோவின் உள்ளே தென் கிழக்கு திசையில் வைய்யுங்கள்.
இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டின் செலவுகள் குறைந்து பணம் தங்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
குறிப்பு- 3
- நாணயம்- 1
- மஞ்சள்- 2 ஸ்பூன்
அதேபோல் நீங்கள் தண்ணீருடன் 2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து மஞ்சள் தண்ணீரை தெளிக்கும் போது அதில் 1 நாணயத்தை போட்டு தெளித்து விட்டு பின்பு அந்த நாணயத்தை பூஜை அறையில் வைய்யுங்கள்.
பின்பு வழக்கம் போல் பூஜை அறையில் பூஜை செய்யுங்கள். இத்தகைய முறையினை எல்லாம் செய்து முடித்து விட்டு வழக்கம் போல் செல்வம் சேர செய்யும் முயற்சியினையும் விடாமல் செய்து வருவதன் மூலம் விரைவில் செல்வ செழிப்பு உண்டாகும்.
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …
2024-ல் ரிஷபத்தில் நுழையும் குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோகமான வாழ்க்கை தான்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |