செல்வ செழிப்புடன் வாழ
பொதுவாக வீட்டில் வறுமை நீடித்து கொண்டே இருந்தால், அதற்கு நாம் வீட்டில் செய்யும் பல தவறுகளும் காரணமாக இருக்கலாம். ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள சில சாஸ்திரங்களை நாம் முறையாக கடைபிடிக்காமல் இருந்தால் வீட்டில் வறுமை நீடிக்கும் என்பது நம்பிக்கை. சிலர் என்னதான் அதிகமாக சம்பாதித்தாலும் வீட்டில் ஒரு ருபாய் கூட தாங்காது. அதற்கு காரணம் வீட்டில் நாம் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்காமல் இருப்பதே ஆகும். ஆனால், இந்த சாஸ்திரங்களை எல்லாம் நம் முன்னோர்கள் தவறாமல் கடைபிடித்து வந்தனர். அதனால் தான் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். எனவே, வீட்டில் செல்வ செழிப்பு பெருக செய்யக்கூடாத தவறுகள் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.
செல்வ செழிப்புடன் இருக்க என்ன செய்ய வேண்டும்.?
ஒவ்வொரு வீட்டிலும் மஹாலக்ஷ்மி வடிவத்தில் இருப்பது பால் தான். இதனை வீட்டில் நாம் எப்போதும் வறட்சியடையாமல் வைத்திருக்க வேண்டும். வீட்டில் எப்போதும் பால் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதிக அளவில் இல்லையென்றாலும் 1/2 டம்ளர் பாலாவது எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும்.
மேலும், பால் பாத்திரத்தை காயவிடாமல் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து வைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், பால் வாங்கும் போது வரும் பாத்திரத்தை எடுத்து செல்லாமல் அதில் ஒரு சொட்டு தநேர்வது வைத்து வாங்க வேண்டும்.
செல்வ செழிப்பை அதிகப்படுத்துவதற்கு 5 வெற்றிலை மட்டும் போதும்..
அனைவரது வீட்டிலும் பூஜை அறையில் காமாட்சி விளக்கு இருக்கும். இதனை உங்கள் விருப்பப்படி வாரத்தில் ஒரு முறையோ அல்லது மாதக்கணக்கிலோ சுத்தம் செய்து வைப்பீர்கள். காமாட்சி விளக்கை சுத்தம் செய்ததும், அதில் மஞ்சள், குங்குமம் இட்டு வைத்து மறுநாள் விளக்கை ஏற்றி கொள்ளலாம் என அப்படியே வைத்து விடுவீர்கள்.
ஆனால், அப்படி செய்ய கூடாது. காமாட்சி விளக்கை எப்போதும் எண்ணெய் இல்லாமல் வெறுமனே வைக்க கூடாது. சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்த பிறகு, அதில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைக்க வேண்டும். ஏனென்றால் வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணமாகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |