Veetil Selvam Sera Pariharam in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். அதனால் அனைவருமே அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது நாம் மிகவும் கடினமாக உழைத்து அந்த பணத்தை சேமித்து வைப்போம். ஆனாலும் அந்த செல்வம் நீண்டநாட்களுக்கு நிலைத்து இருக்காது ஏதாவது ஒருவகையில் செலவாகிவிடும். அதனால் நாம் மிகவும் வருத்தப்படுவோம். அதாவது நானும் தான் மிக மிக கடினமாகி உழைக்கிறேன், ஆனால் ஏன் என்னிடம் மட்டும் செல்வம் சேரவே இல்லை என்று வருத்தப்படுவோம். அப்படி வருத்தப்படுபவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்று வீட்டில் செல்வம் பெருக உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.
வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்த ஒரு பரிஹாரம் மட்டும் போதும்
Veetil Selvam Peruga Pariharam in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களும் நீங்கி வீட்டின் செல்வச்செழிப்பு அதிகரிக்க உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்.
- பட்டு அல்லது காட்டன் மஞ்சள் துணி – 1
- உப்பு – 1 கைப்பிடி அளவு
- 1 நாணயம் – 1
- குப்பைமேனி வேர் – 1
- வசம்பு – 1
இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் பணக்கஷ்டம் வரவே வராது
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 மஞ்சள் துணியை நன்கு சுத்தமான நீரில் நினைத்து காயவைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு உப்பு, 1 நாணயம், 1 குப்பைமேனி வேர் மற்றும் 1 வசம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு ஒரு மூட்டை போல் கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை உங்கள் வீட்டின் நிலைவாசலில் கட்டிக்கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை நீங்கள் மாதந்தோறும் வரும் அம்மாவாசை நாளன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் அல்லது மாலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
இந்த மூட்டையில் உள்ள பொருட்களை மாதந்தோறும் மாற்றி கொள்ளுங்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |