Veetil Ulla Prachanai Neenga Pariharam in Tamil
பொதுவாக நாம் அனைவரின் வீட்டிலேயும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் இருக்கும். ஆனால் ஒரு சிலரின் வீட்டில் பெரிய பிரச்சனைகள் வரும் அதுவும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அதனை சரிசெய்வதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொள்ளுவோம். ஆனால் ஒருசில நேரங்களில் அவை நமக்கு கைகொடுக்கும் ஆனால் ஒரு சில பிரச்சனைகளை நாம் எவ்வளவு முயன்றாலும் அதனை போக்கவே முடியாது. அவ்வாறு உள்ள பிரச்சனைகளை போக்குவதற்காக நாம் ஒரு சில ஆன்மிக முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் போக்கி கொள்ளலாம். எனவே தான் இன்று உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் போக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக காண போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் பணக்கஷ்டம் வரவே வராது
Pariharam for all the Troubles at Home in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி சந்தோசம் பெறுக உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க. அதற்கு முன்பு இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- மஞ்சள்நிற துணி – 1
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- 1 ரூபாய் நாணயம் – 1
- துளசி செடியின் வேர் – 1
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் ஒரு துளசி செடியின் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள் நிற துணியில் வைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடனே 1 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் 1 ரூபாய் நாணயம் ஆகியவற்றை சேர்த்து வைத்து ஒரு மூட்டை போல் கட்டி கொள்ளுங்கள். இந்த மூட்டையினை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்யுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
முதலில் நாம் இந்த மூட்டையில் வைத்துள்ள துளசி செடியின் வேரினை வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள் மண்ணிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் அல்லது மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் செய்யலாம். அதேபோல் மாதம் அல்லது வாரம் ஒருமுறை இந்த மூட்டையில் உள்ள பொருட்களை மாற்றி கொள்ளுங்கள்.
நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |