வீட்டில் வைக்கக் கூடாத பொருட்கள்
நம்முடைய வீடுகளில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்று. அதிலும் சிலர் பூஜை அறைக்கு தனி பொருட்களாகவும், வீட்டு உபயோகத்திற்கு தனி பொருட்களாகவும் என்று வாங்கி தான் உபயோகிப்பார்கள். அப்படி வாங்கி உபயோகிக்கும் பட்சத்தில் என்ன தான் நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கு தேவைப்பட்டாலும் கூட ஆன்மீக ரீதியாக சில பொருட்கள் ஆனது வீட்டில் தீராத பண கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆகையால் வீட்டில் பண கஷ்டத்தை ஏற்படுத்தும் பொருட்கள் என்னென்ன என்றும், அதனை ஏன் வைக்கக்கூடாது என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
பண கஷ்டத்தை ஏற்படுத்தும் 5 பொருட்கள்:
கண்ணாடி பொருட்கள்:
முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி வளையல், சமையலுக்கு பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள் மற்றும் பீங்கான் பொருட்கள் என இதுபோல வீட்டில் இருக்கும் பொருட்கள் எது உடைந்து இருந்தாலும் அதனை உடனே நீக்குவது அவசியம். எனவே இதுபோன்ற கண்ணாடி பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் தீராத கஷ்டம் ஏற்படும் என்பது ஒரு ஐதீகமாக இருக்கிறது.
நாற்காலி:
வீட்டின் தேவைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி, மேசை, கட்டில் மற்றும் சோபா என இதுபோன்ற பொருட்கள் எது உடைந்து இருந்தாலும் அல்லது லேசாக ஆடினாலும் கூட அதனை வீட்டில் வைக்கக்கூடாது.
இத்தகைய பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் மருத்துவம் ரீதியான செலவானது அதிகரிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
காலில் அணியும் செருப்பு:
நமக்கு தேவைப்படாத அல்லது பயன்படாத காலணிகள் எதுவாக இருந்தாலும் அதனை உடனே தூக்கி வீசி விடுங்கள். ஏனென்றால் இதுபோன்ற காலணிகளை வீட்டில் வைப்பதன் மூலம் துருதிஷ்டமானது வீட்டில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எந்த பறவை வீட்டிற்குள் கூடு கட்டினால் மிகவும் அதிர்ஷ்டம் தெரியுமா |
கடிகாரம்:
மணி பார்ப்பதற்கு கட்டாயமாக கடிகாரம் தேவைப்படும். அந்த வகையில் ஓடாத கடிகாரம் எது இருந்தாலும் அதற்கு பேட்டரி போட்டு ஓட விடுங்கள். அப்படி செய்தும் ஓடவில்லை என்றால் அதனை உங்களுடைய வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். இப்படி ஓடாத கடிகாரத்தை வைத்து இருப்பதும் வீட்டில் பண கஷ்டத்தை ஏற்படுத்தி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
துடைப்பம்:
வீட்டினை சுத்தம் செய்ய உதவும் துடைப்பம் பழையதாக மாறிவிட்டது என்றால் அதனை உடனே தூக்கி எறிந்து விடுங்கள். இவ்வாறு தூக்கி வீசும் பொருளை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் செய்யாதீர்கள். அதேபோல் புது துடைப்பம் வாங்கி வீட்டில் இருந்தாலும் அதனை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து இருக்காதீர்கள்.
எனவே வீட்டின் பணம் வரவையும், செல்வ செழிப்பினையும் பாதிக்கும் இந்த பொருளை ஒருபோதும் வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |