வறுமை உண்டாக என்ன காரணம்
இன்றைய பதிவில் வீட்டில் வறுமை ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று பார்க்க இருக்கின்றோம். தேவையில்லாத பொருள்களை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் பிரச்சனைகள் , மன கஷ்டங்கள் மற்றும் நோய்கள், பண கஷ்டம் போன்றவை உண்டாகும். வீட்டில் யாருக்கும் ஏதாவது பொருட்கள் இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கி கொள்வார்கள். அப்படி வந்து கேட்கும் போது இல்லையென்று சொல்லாமல் கொடுக்கும் பழக்கம் நிறைய நபரிடம் இருக்கிறது. அப்படி நீங்கள் கொடுக்கும் நேரமானது மாலை நேரமாக இருக்க கூடாது. மாலை நேரத்தில் சில பொருட்களை தானம் வழங்க கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. வீட்டில் எதிர்மறையான ஆற்றலை எதனால் வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
காலையில் எழுந்திருப்பது:
நம் அன்றாட வாழ்வில் சிலர் சூரிய உதயத்திற்கு பிறகு எழுந்திரிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி எழுந்திரிக்கும்போது வீட்டில் எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். இதனை தவிர்க்க வீட்டில் இருக்கும் அனைவரும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திரிப்பது மூலம் வீட்டில் வறுமை நீங்கி மகிழ்ச்சி உண்டாக்கும்.
தலைமுடி வெட்டுதல்:
முடி மற்றும் நகங்கள் வெட்டுவதற்கு என குறிப்பிட்ட நாள் மற்றும் நேரங்கள் உள்ளன. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முடிவெட்டுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாலை நேரத்தில் முடி மற்றும் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த கிழமைகளில் இவ்வாறு செய்யும்போது வீட்டில் வறுமை மற்றும் வீட்டில் கஷ்டங்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் மற்ற கிழமைகள் முடி, நகங்களை வெட்ட வேண்டும். இதன் மூலம் வீட்டில் கஷ்டங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
சொட்டு நீர் சொட்டுவது:
நமது வீட்டில் இருக்கும் குழாய்களில் சொட்டு நீர் வடிவது வீட்டில் பணகஷ்டத்தை உண்டாக்க கூடும் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் குழாய்களில் சொட்டு நீர் வடியவிடாமல் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் ஏற்படும் பணகஷ்டத்தை தவிர்க்க முடியும்.
உடைந்த பொருள்கள்:
வீட்டில் கண்ணாடி எலக்ட்ரானிக் போன்ற உடைந்த பொருள் ளை வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் வீட்டில் பண இழப்பு மற்றும் நோய்கள் ஏற்படக் கூடும்.
பழைய துணி:
வீட்டில் இருக்கும் பழைய துணிகள் மற்றும் பழைய செருப்புகள் அணிய கூடாது. மேலும், பழைய பொருட்களை தானமாக கொடுக்க கூடாது. இப்படி செய்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரார்த்தனை:
வீட்டில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது மற்றும் முன்னோர்களை வழிபாடு செய்து வருவதன் மூலம் வீட்டில் மனநிம்மதி ஏற்படும் எனவும் பணக்கஷ்டங்கள் நீங்கும் எனவும் கூறப்படுகிறது.
வீட்டில் ஒட்டடை அதிகமாக இருப்பது:
வீட்டில் ஒட்டடை அதிகமாக இருந்தால் மன கஷ்டங்கள் மற்றும் நிதி கஷ்டம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் வீட்டில் ஏற்படும் வறுமையை தவிர்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
உப்பு, அரிசி சுத்தமாக இல்லாமல் வைத்திருப்பது:
நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் அரிசி சுத்தமாக காலி செய்தால் வீட்டில் வீட்டில் பண கஷ்டம் வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் இந்த இரண்டு பொருள்கள் இல்லாமல் இருக்க கூடாது. மேலும், இந்த பொருள்களை மாலை நேரத்தில் யாருக்கும் கொடுக்க கூடாது.
சாப்பிட்ட பாத்திரத்தை காயவிடுவது:
நாம் சாப்பிட்டு வைத்திருக்கும் பாத்திரத்தை காயவிடுவதன் மூலம் வீட்டில் வறுமை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது வீட்டில் எதிர்மறையான ஆற்றலை உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது.












