நாம் வசிக்கும் வீட்டிற்கு எதிரில் இருக்க கூடாதவை
பொதுவாக சொந்த வீடு கட்டும் போதும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி வாஸ்து படி தான் ஒவ்வொன்றும் செய்வோம். வீட்டின் வாசல் பகுதி எந்த திசை பார்த்து இருக்கிறது, பூஜை அறை, படுக்கை அறை போன்றவை எந்த திசையில் இருக்கிறது போன்றவை எல்லாம் செக் பண்ணி தான் வாங்குவோம். ஆனாலும் சில விஷயங்களை நாம் கவனிப்பதில்லை. அவை என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
வீட்டின் வாசலில் இருக்க கூடாதவை:
வாசலுக்கு எதிர்த்த மாதிரி சந்து தெரிய கூடாது.
உங்கள் வீட்டின் வாசலானது தெரு முனையாக இருக்க கூடாது, இது போல இருப்பது வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும், அதனால் இது மாதிரி வீட்டை தவிர்த்திடுங்கள்.
அடுத்து குப்பை தொட்டியை வீட்டின் முன்புறம் வைப்பதை தவிர்த்திட வேண்டும். வாசலில் மரங்கள் இருக்கலாம், ஆனால் இவற்றின் நிழல் ஆனது வாசலில் படும்படி இருத்தல் கூடாது.
குளம், ஆறு போன்றவை வீட்டின் முன்புறம் இருக்க கூடாது.
வீட்டின் வாசலில் நின்று பார்த்தால் கோவில் மற்றும் கோவிலின் கோபுரம் தெரிய கூடாது. இது போல வீடு கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
வீட்டின் வாசலில் இருக்க வேண்டியவை:
காலை நேரத்தில் வீட்டின் வாசல்பகுதியில் சூரிய ஒளி படுமாறு இருக்குமாறு வைத்தல் வேண்டும். சூரிய ஒளி வீட்டின் வாசலபகுதியில் படுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. நுழைவு வாசலாலுக்கு வடகிழக்கு திசை ஏற்றதாக இருக்கும்.
சூரிய ஒளி படும்படி இல்லையென்றால் பிரகாசமான விளக்குகளை பயன்படுத்துங்கள். இந்த விளக்குகளில் சிவப்பு நிற விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மஞ்சள் நிற விளக்குகளை பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி, அதில் பூக்களை வைத்து விட வேண்டும். இது போல வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வீட்டில் நிலப்படியை பூக்கள் மற்றும் செடிகளால் அலங்கரிக்க வேண்டும், மேலும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். இப்படி வைப்பதால் உங்கள் வீட்டில் எப்போதும் லட்சுமி குடியிருப்பாள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |