வீட்டு வாசலில் கண்ணாடி வைக்கலாமா.!

Advertisement

வீட்டு வாசலில் கண்ணாடி வைக்கலாமா

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. அப்படி நாம் கனவாக இருக்கும் வீட்டை கட்ட ஆரம்பிப்பது முதல் வாஸ்து சாஸ்திரம் படி தான் கட்ட ஆரம்பிக்கிறோம். ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தாலும் சரி அல்லது இல்லையென்றாலும் சரி நாம் ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிப்போம்.

அது போல தான் வீடு கட்டுவதும், வீடு கட்டுவது மட்டுமில்ல்லமல் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் வாஸ்து சாஸ்திரத்தை படி தான் வைப்போம். ஏனென்றால் நாம் தவறான திசையில் வைப்பதன் மூலம் நமக்கு தீங்கினை விளைவிக்கும். அதுமட்டுமில்லாமல் வாஸ்து சாஸ்திரமானது ஒவ்வொரு பலனை கொடுக்கும். அந்த வகையில் வீடு வாசலில் கண்ணாடி வைக்கலாமா என்று அறிந்து கொள்வோம்.

வீட்டு வாசலில் கண்ணாடி வைக்கலாமா.!

வீட்டு வாசலில் கண்ணாடி வைக்கலாமா

பெரும்பாலானவர்கள் வீட்டில் வாசலில் தான் கண்ணாடியை மாட்டி வைக்கிறார்கள். ஏனென்றால் இப்படி வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஒருத்தி சிலருக்கு கண்ணாடியை வாசலில் வைப்பதன் மூலம் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும். மேலும் சண்டை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். உங்க வீட்டில் நீங்கள் வாசலில் கண்ணாடியை வைத்து இது போல பிரச்சனை இருந்தால் வாசலில் இருந்து கண்ணாடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா

மேலும் வீட்டிற்கு வருபவர்கள் கண்ணாடியை பார்த்து வர வேண்டும் என்று சிலர் கூறுவார்கள். ஏனென்றால் நிலைவாசல் என்பது அஷ்டலக்ஷ்மிகள் மற்றும் மஹாலக்ஷ்மியும் வாழும் இடமாக இருக்கிறது. அதனால் வீட்டிற்கு வருபவர்கள் கண்ணாடியை பார்த்து தான் வருவார்கள். இதனால் மகாலட்சுமியானது அந்த கண்ணாடியிலே இருக்கும் என்பதால் தான் நிலைவாசலில் கண்ணாடியை வைக்க கூடாது என்று கூறுகிறார்கள்.

கண்ணாடியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்:

கண்ணாடியை வீட்டின் மேற்கு திசை அல்லது தெற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் கண்ணாடியை வைப்பது சிறந்தது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement