முருக பெருமானின் வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்..!

Advertisement

Vel Undu Vinai Illai Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த முருகன். இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். மேலும் ஒரு சிலர் தங்களது மனதிற்கு மிகவும் நெருக்கமான கடவுளான முருகனை போற்றி வணகுவதார்காக சில பஜனை பாடல்களை பாடி வணங்குவார்கள். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக வேலுண்டு வினையில்லை பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து முருகனின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

Vel Undu Vinai Illai Song Lyrics in Tamil

Vel Undu Vinai Illai Song Lyrics in Tamil

(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) …… (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் … முருகன் …… (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் … முருகா …… (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் … முருகா …… (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் … முருகா …… (வேலுண்டு)

கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் … கந்தனே …… (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி … முருகா …… (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் … முருகா …… (வேலுண்டு)

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே … முருகா …… (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் … முருகா …… (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் … முருகா …… (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் … முருகா …… (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே … முருகா …… (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் … முருகா …… (வேலுண்டு).

அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்

வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement