நல்ல அல்லது நிரந்தர வேலை கிடைக்க தினமும் 5 முறை இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Advertisement

Velai Kidaika Manthiram in Tamil | வேலை கிடைக்க பதிகம் | நல்ல வேலை கிடைக்க மந்திரம்

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் போகும் வேலை நிரந்தரமான வேலையாகவும்,நல்ல வேலையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். இந்த ஆசைகளை அனைத்தும் ஒரு சிலருக்கு நிறைவேறி இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த ஆசை வெறும் ஆசையாக மட்டுமே இருக்கும். அதாவது நானும் நன்றாக தான் முயற்சிக்கின்றேன். ஆனால் எனக்கு நான் எதிர்பார்க்கும் அளவிற்கு ஒரு நல்ல அல்லது நிரந்தர வேலை கிடைக்கவே இல்லை என்று ஒரு சிலர் கூறி கஷ்டப்படுவதை பார்த்து இருப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல மற்றும் நிரந்தர வேலை கிடைக்க உதவும் ஒரு மந்திரத்தை பதிவிட்டுளோம். எனவே இந்த பதிவில் பதிவிட்டுள்ள மந்திரத்தை தினமும் மனமார கூறி வருவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் வெற்றியும், அதிர்ஷ்ட மழையும் பொழியும் 

வேலை கிடைக்க மந்திரம் | Velai Kidaika Manthiram in Tamil:

Arasu velai kidaika manthiram in tamil

நீங்கள் எதிர்பார்த்த நல்ல மற்றும் நிரந்தர வேலை கிடைக்க உதவும் கீழே குறிப்பிட்டுள்ள பதிகம் அல்லது மந்திரத்தை தினமும் 5 முறை மனமார கூறி வருவதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அது என்ன மந்திரம் என்று இங்கு காணலாம் வாங்க.

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.

ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

நீங்கள் நினைத்த வேலை கிடைக்க தவறாமல் இதை மட்டும் செய்யுங்கள்

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால் சிவபெருமானுக்கு இதை மட்டும் செய்யுங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement