Velava Velava Lyrics in Tamil
நம் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நாம் கேட்பவற்றை நமக்கு அளிப்பவர் முருகன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அதில் ஒன்றான கடவுள் தான் முருகன், முருகனை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். இவருக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள் ஏரளாமானோர் இருக்கிறார்கள். அப்படி நீங்கள் வழிபடும் போது அவருக்கு உரிய பாடல்களை உச்சரிப்பதன் மூலம் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. எனவே இத்தனை சிறப்புகளை அள்ளிக்கொடுக்கும் முருகனை வழிபடுவதன் மூலம் நம் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. அதனால் தான் இந்த பதிவில் வேலவா வேலவா பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.
வேலவா வேலவா வேல் முருகா வா வா:
வேலவா வேலவா வேல்முருகா வா வா
வேல்முருகா வா வா வேல் முருகா வா வா
வேலவா ஷண்முகா முருகா முருகா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாஹனா முருகா முருகா
வேலவா வேலவா வேல்முருகா வா வா
சூராதி சூரா ஸுப்ரஹ்மண்ய தேவா
சரவணா ஷண்முகா முருகா முருகா
வேலவா வேலவா வேல்முருகா வா வா
அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்:
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
முருகா முருகா முருகா
அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |