வெள்ளி மோதிரம் யாரெல்லாம் அணியலாம்

Advertisement

வெள்ளி மோதிரம் யாரெல்லாம் அணியலாம்

பொதுவாக வெள்ளி உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது. அதனாலயே வெள்ளியில் செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொள்வார்கள். எவ்வளவு பெரிய பணக்காரர்களும் தங்க நகைகளை அணிந்து கொண்டாலும் அதில் ஒன்றாவது வெள்ளி மோதிரத்தை அணிந்திருப்பார்கள். ஏனென்றால் வெள்ளி மோதிரமானது உடல் சூட்டை தணிக்க ஒன்றாக இருக்கிறது. அது போல சில நகைகளை சில பேர் அணியலாம், அணிய கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இந்த பதிவில் யாரெல்லாம் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வெள்ளி மோதிரம் எந்த விரலில் அணியலாம் | Velli Mothiram Entha Viralil Anivathu

ஆண்கள் வெள்ளி மோதிரம் எந்த விரலில் அணிய வேண்டும்

வெள்ளி நகையானது சிவபெருமானின் கண்களிலிருந்து உருவானது என்று கூறப்படுகிறது. அதனால் வெள்ளி இருக்குமிடமெல்லாம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். இதனை எந்த விரலில் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்று நினைக்க கூடாது. சில வீரர்களில் மட்டும் அணிந்திருந்தால் தான் செல்வ செழிப்பு மற்றும் பெருமை வந்து சேர்ந்து விடும்.

கட்டை விரலில் மோதிரம் அணிவது மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிவது வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். வெள்ளி மோதிரம் அணிவதால் ராகு கேது தோஷம் நீங்குவதுடன் மனம் அமைதியாக இருக்கும்.

எந்த ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணியலாம்:

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவரும் நகைகளை அணிய வேண்டும் என்ற ஆசையை இருக்கும். ஆனால் எல்லாராலும் தங்க நகையை அணிய முடியாது. அதனால் வெள்ளி நகைகளை வாங்கி மகிழ்வார்கள். இந்த வெள்ளி மோதிரம் அணிவதால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் ஆன்மிகத்தில் வெள்ளி மோதிரம் அணிவது நமது சிந்தனையை கட்டுப்படுத்தி மன அமைதியை தருகின்றது. கோபத்தை தணிக்க முடியும். ஞாபக சக்தியை அதிகப்படுத்த முடியும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள்  வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் வெள்ளி மோதிரம் அணியலாம். இது தவிர மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் தவறுதலாக கூட வெள்ளி மோதிரம் அணியக்கூடாது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement