வெள்ளி வாங்க உகந்த நாள்
வணக்கம் நண்பர்களே. பொதுவாக தங்கத்திற்கு அடுத்ததாக அனைவரும் விரும்பி வாங்கும் பொருள் வெள்ளி நகைகள் தான். தங்கம் வாங்குவதற்கு நாம் நல்ல நாள் பார்த்து வாங்குவது வழக்கம். அதேபோல், வெள்ளி நகைகள் வாங்கும்போதும் நல்ல நாள் பார்த்து வாங்க வேண்டும். ஆகையால் இப்பதிவின் வாயிலாக வெள்ளி வாங்க உகந்த நாள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மங்களகரமான பொருள்களில் ஒன்று வெள்ளி. தங்க நகைகளை வாங்குவதை போலவே வெள்ளி நகைகளையும் பலபேர் விரும்பி வாங்குகிறார்கள். அப்படி வாங்கும்போது, நல்ல நாள் பார்த்து வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். நல்ல நாள் பார்த்து வெள்ளி நகைகளை வாங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும். எனவே, நீங்கள் வெள்ளி வாங்க போகிறீர்கள் என்றால், (Velli Vanga Ugantha Naal) பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
Velli Vanga Sirantha Naal:
வியாழன் கிழமை:
வெள்ளி வாங்குவதற்கு உகந்த கிழமையாக வியாழன் கருதப்படுகிறது. ஏனென்றால், வியாழன் கிழமை ஆனது, குரு பகவானுடன் தொடர்புடையது ஆகும். வியாழன் கிரகம் செல்வ செழிப்பிற்கான கிரகம் ஆகும். ஆகையால், வியாழன் கிழமை அன்று நீங்கள் வெள்ளி வாங்கினீர்கள் என்றால், செல்வ செழிப்பு உண்டாகும்.
அட்சய திரிதியை:
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல், அட்சய திரிதியை அன்று வெள்ளி வாங்குவதும் நல்லது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரும் அட்சய திரிதியை அன்று வெள்ளி வாங்குவதன் மூலம் இரு மடங்காக பெருகும்.
பூசம் நட்சத்திரம்:
பூசம் நட்சத்திரம் வரும் நாளில், வெள்ளி வாங்குவது நல்லது. பூசம் நட்சத்திரம் என்பது மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்று. வாஸ்து சாஸ்திரத்தின் படி பூச நட்சத்திர நாளில் வெள்ளி வாங்குவதன் மூலம் செல்வம் பெருகி அதிர்ஷ்டம் உண்டாகும்.
பௌர்ணமி நாட்கள்:
பௌர்ணமி நாட்கள், வெள்ளி வாங்குவதற்கு சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. பௌர்ணமி நாளில், சந்திரனின் ஆற்றல் அதிகரித்து இருக்கும். இந்நாளில், வெள்ளி வாங்குவதன் மூலம், வீட்டில் செல்வமும் நேர்மறை ஆற்றலுடன் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
வெள்ளிக் கடை வாஸ்து:
வெள்ளி வாங்கும்போது, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து இருக்கும் கடையில் வாங்குவது நல்லது. வடக்கு அல்லது கிழக்கு திசை செல்வதுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
வெள்ளி விலை இன்றைய நிலவரம் 2024
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |