வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறக்கலாமா? | Friday Born Boy Baby Astrology in Tamil
குழந்தை பிறப்பதே ஒரு வரம் என்று சொல்லலாம். சிலருக்கு திருமணமாகி பல வருடங்கள் குழந்தை பாக்கியம் ஒன்று இல்லாமலே இருக்கும். அதற்கு அந்த தம்பதியினர் குழந்தை பாக்கியம் அருளும் கோவில் குளங்கள், பாவ புண்ணியம் நீக்கும் ஸ்தலங்கள், பல பரிகாரங்களை செய்வார்கள். சிலர் ஆண் குழந்தை பிறப்பதை வரமாக பார்ப்பார்கள். ஆண் குழந்தை வெள்ளிக்கிழமையில் பிறந்தால் என்ன பலன்? வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் நல்லதா இல்லை கெட்டதா என்ற உங்கள் சந்தேகத்திற்கு நாங்கள் இந்த பதிவின் மூலம் தெளிவான விளக்கத்தை அளிக்கிறோம். படித்து பயன் பெறுங்கள்.. தெரியாத பலருக்கும் இந்த தகவலை படித்து தெரிந்துக்கொண்டு தெரியப்படுத்துங்கள்.
பொதுவாக, வெள்ளிக்கிழமை என்பது இறைவன் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று குழந்தை பிறந்தால் நல்லது என்று கூறுவார்கள். இது பொதுவான பலன். இதுவே பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால் அதற்கான பலன் வேறுபடும். அதாவது, வெள்ளிக்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தால் மஹாலக்ஷ்மியே வந்து பிறந்து இருக்கிறது என்று கூறுவார்கள். அதுவே ஆண் குழந்தை பிறந்தால் வீட்டிற்கு ஆகாது என்று கூறுவார்கள். முக்கியமாக அக்குழந்தையின் தந்தைக்கு ஆகாது என்று கூறுவார்கள். அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன் | Friday Boy Baby Born:

- வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்தால் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு எந்த உதவிகளையும் செய்ய மாட்டார் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது. அந்த குழந்தை சேர்த்துவைத்த பணம் தந்தையின் இறுதி சடங்குக்கு உதவிகரமாக இருக்காது. ஏனெனில் அவர் தந்தை, அவரது இளம் வயதிலேயே காலமாகும் நிலை ஏற்படுவதால், மகன் பொருள் சேர்க்கும் நிலையில் தந்தை இருக்கமாட்டார் என்பதாகும். வெள்ளிக்கிழமையில் பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை இருக்காது. குறிப்பாக வெள்ளிக்கிழமையில் நவமி திதியில் அன்று பிறந்தவர்களுக்கு மட்டுமே இளம் வயதிலையே தந்தையை இழப்பதற்கு வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை அன்று நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு அவருடைய தாயார் சில பரிகாரங்களை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்: அந்த பரிகாரங்களை கீழே காண்போம்.
பரிகாரங்கள்:
- வெள்ளிக்கிழமையில் நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு முழுமையாக 1 வயது முடிந்த பிறகு அந்த குழந்தையை உங்கள் குலதெய்வத்திற்கோ அல்லது திருச்செந்தூர் முருகனுக்கோ தத்தம் செய்ய வேண்டும். கடவுளுக்கு தத்து கொடுத்த பிறகு விலை கொடுக்காமல் குழந்தையை வீட்டிற்கு அழைத்துவர வேண்டும்.
- குழந்தை பெரிய வயதில் வந்தவுடன் திருமணம் செய்யும் வரை அந்த குழந்தையை எந்த கோவிலிற்கு எழுதி வைத்தீர்களோ அந்த கோவில் பெயரிலையே மற்ற அனைத்து கோவில்களிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
- குழந்தைக்கு திருமணம் முடிக்கும் சமயம் வரும்போது குழந்தையை எந்த கோவிலில் எழுதி கொடுத்தீர்களோ அந்த கோவிலிற்கு சென்று கடவுளிடம் நீ வளர்த்து ஆளாக்கிய என் குழந்தையை உன்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன் என்று எழுதி தரவேண்டும். இப்படி செய்வதால் வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தையின் தாய் தீர்க்க சுமங்கலியாகவும், தந்தையும் ஆரோக்கியமாய் நெடுநாள் வாழ்வார்.
குழந்தையை விட்டு தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
- சிலர் குடும்ப சூழ்நிலைக்காக வெளிநாட்டில் இருப்பார்கள். சிலர் தொலைத்தூரத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நீங்கள் இருக்கின்ற இடத்திலையே உங்களுடைய குல தெய்வத்தினை மனதில் நினைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த இந்த ஆண் குழந்தையை நீயே தீர்க்க சுமங்கலியாக நெடுநாள் வாழ வைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளவும்.
- தாங்கள் இருந்த இடத்திலே வேண்டிக்கொள்பவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது உங்களுடைய குல தெய்வ பெயரையோ அல்லது திருச்செந்தூர் முருகன் பெயரையோ வைக்க வேண்டும். அப்படி பெயரை வைக்கும் போது வெள்ளிகிழமை நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தை தீர்க்க சுமங்கலியாகவும், தந்தைக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
- வெள்ளிக்கிழமையில் நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தை பிறந்துவிட்டால் அச்சம் கொள்ளாதீர்கள். மேல் கூறிய பரிகாரங்களை செய்து வந்தால் குழந்தையும், தந்தையும் நெடுநாள் வாழ்வார்கள்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |