வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளிக்கிழமையில் கடன் வாங்க கூடாத பொருட்கள்

Updated On: June 24, 2025 1:34 PM
Follow Us:
vellikilamai kadan vanga koodathavai
---Advertisement---
Advertisement

வெள்ளிக்கிழமை மகிமை

பொதுவாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக இருக்கிறது. அதில் ஒன்றான வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய நாளாக இருக்கிறது. இந்த நாட்களில் சில பொருட்களை கடன் வாங்க கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதனை பற்றி காண்போம்.

வெள்ளிக்கிழமையில் கடன் வாங்க கூடாத பொருட்கள்

கிழமைகளில் வெள்ளிக்கிழமை என்பது மங்கலகரமான நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்தால் செல்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். அதே சமயம் வெள்ளிக்கிழமையில் சிலவிஷயங்களை செய்ய கூடாது. அவை என்னென்ன விஷயங்கள் என்று தெரிந்து கொள்வோம்.

வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிக்கக் கூடாது. பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆனால் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. முடி வெட்ட கூடாது. முகச்சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும். நகம் வெட்ட கூடாது.

பூஜை பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது. வெள்ளிக்கிழமையில் உப்பு, தயிர், பருப்பு, ஊசி போன்ற பொருட்களை கடனாக கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லாம் மஹாலட்சுமி வசம் செய்வாள். அதனால் மஹாலட்சுமி வசம் செய்யும் எந்த பொருளையும் வெள்ளிக்கிழமை அன்று கடனாக வாங்க கூடாது.

மாலை நேரத்தில் வீட்டை இருட்டாக வைத்திருக்கக் கூடாது. பெண்கள் அணிந்திருக்கும் நகையை கழற்றவும் கூடாது. அடகும் வைக்க கூடாது .

வெள்ளிக்கிழமையில் ராகு கால நேரமான காலைபத்து முப்பது மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் வீட்டில் விளக்கேற்றக் கூடாது. இதனால் வீட்டில் கலகம் ஏற்படும். பழைய துணிகளை வெள்ளிக்கிழமையில் தைக்க கூடாது. வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது. கடன் சுமை அதிகரிக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now