செல்வவளம் பெருக வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள்..!

women friday spiritual secrets in tamil

Women Should Not Do This On Friday in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவில் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் செய்ய கூடாத செயல்கள் என்ன என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக இந்து சமயத்தில் வெள்ளிக்கிழமை என்பது தெய்வத்திற்குரிய நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்வது, கோவிலுக்கு சென்று வழிபடுவது போன்ற செயல்களை செய்வார்கள். அதுபோல வீட்டில் இருக்கும் பெண்கள் வெள்ளிக் கிழமைகளில் சில செயல்களை செய்யக்கூடாது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

செவ்வாய் கிழமை அன்று கடைபிடிக்க வேண்டியவை..!

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் செய்ய கூடாதவை: 

வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்து இறைவனை வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும். பெரும்பாலும் பெண்கள் தான் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பெண்கள் வீட்டை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அதை வைத்து தான் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதுபோல பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் தன்னை அறியாமல் சில செயல்களை செய்கிறார்கள். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோவிலுக்கு செல்லும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
 1. வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் கோலம் போடாமல் விளக்கு ஏற்ற கூடாது.
 2. ஏற்றிய விளக்கை பூ கொண்டு தான் அணைக்க வேண்டும். விளக்கு தானாகவோ அல்லது வாயால் ஊதியோ அணைக்க கூடாது.
 3. விளக்கு ஏற்றிய பின் கிழிந்த துணிகளை தைக்க கூடாது.
 4. வெள்ளிக்கிழமைகளில் பூஜை பொருட்களை சுத்தம் செய்ய கூடாது. அதேபோல பூஜை அறை மற்றும் சமையல் அறையை சுத்தம் செய்ய கூடாது.
 5. வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிக்க கூடாது. அதுபோல இரவில் வீட்டை கூட்டினால் குப்பையை வெளியில் கொட்ட கூடாது.
 6. வாசல்படி, ஆட்டுக்கல், உரல் மற்றும் அம்மி போன்றவற்றில் பெண்கள் உட்காரக் கூடாது.
 7. பெண்கள் ஈரத் துணியுடனோ அல்லது ஈரமான தலையுடனோ பூஜை செய்யக்கூடாது.
 8. வெள்ளிக்கிழமையில் வீட்டை கழுவ கூடாது.
 9. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு மற்றும் ஊசி, நூல் போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.
 10. அதேபோல விளக்கேற்றிய பிறகு கடன் கொடுக்கவோ அல்லது கடன் வாங்கவோ கூடாது.
 11. வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்காமல் இருக்க கூடாது.

வெள்ளிகிழமைகளில் இதுபோன்ற செயல்கள் செய்வதை பெண்கள் தவிர்த்து வந்தால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி செல்வவளம் பெருகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்