Velundu Vinaiyillai Lyrics in Tamil
பொதுவாக செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் காலை அல்லது மாலை நேரத்தில் பக்தி பாடல்களை ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் போடுவார்கள். அதில் ஓடும் போது தாமும் அந்த பாடலை பாடி கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் முருகனை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். அவருக்கு உரிய பலகாரங்கள், சூடம், சாம்பிராணி, பக்தி போன்றவை காண்பித்து அவரை வணங்குவோம். அதோடு மட்டுமில்லமால் மந்திரம், போற்றி போன்றவற்றை கூறி வணங்குவதால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும். அதனால் தான் இந்த பதிவில் வேலுண்டு வினையில்லை பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்:
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே …… (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் … முருகன் …… (வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் … முருகா …… (வேலுண்டு)
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் … முருகா …… (வேலுண்டு)
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் … முருகா …… (வேலுண்டு)
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் … கந்தனே …… (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி … முருகா …… (வேலுண்டு)
நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் … முருகா …… (வேலுண்டு)
ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே … முருகா …… (வேலுண்டு)
முருகன் அஸ்தோத்திரம் பாடல் வரிகள்
திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் … முருகா …… (வேலுண்டு)
கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் … முருகா …… (வேலுண்டு)
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)
மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் … முருகா …… (வேலுண்டு)
தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே … முருகா …… (வேலுண்டு)
வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)
பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் … முருகா …… (வேலுண்டு)
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |