சர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்!

Advertisement

சர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்!

உலகில் மிக அதிகமானோரை பாதித்திருக்கும் நோய் சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய். அப்படிப்பட்ட சர்க்கரை வியாதியை போக்கக் கூடிய கோயிலாக உள்ளது திருவாரூரில் உள்ள வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்.

உலகில் மிக அதிகமானோர் பாதித்திருக்கும் நோய் சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய். இன்சுலின் எனும் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து மருந்துவர்கள் கொடுக்கும் மருந்து சாப்பிட்டு வர அதை கட்டுக்குள் வைக்கலாம் என்கின்றனர்.

மருத்துவர்களை தாண்டி உள்ளது தான் கடவுள் மீது உள்ள நம்பிக்கை. அந்த வகையில் திருவெண்ணியூரில் உள்ள வெண்ணிக்கரும்பர் கரும்பேஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..!

வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் (Venni Karumbeswarar Temple) – அமைந்திருக்கும் இடம்:

  • தஞ்சாவூர் TO திருவாரூர் வழியில் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • மூலவர்: வெண்ணிகரும்பேஸ்வரர்
  • நாயகி: அழகிய நாயகி (சவுந்தர நாயகி)
  • கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 5-8 மணி வரை
    1000-2000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மிகப்பழமையான புராதான கோயிலாக உள்ளது.
  • இந்த தலத்தை நாயன்மார்களில் முக்கியமானவர்களான அப்பர், சம்பந்தர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

சர்க்கரை நோயை போக்கும் கோயில்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோயிலில் சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து பிரகாரத்தை வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் தூவினால், சர்க்கரையை மட்டும் எறும்புகள் திண்றுவிட்டால், அவர்களுக்கு உடனே சர்க்கரை நோய் குறைவதாக ஐதீகம்.

வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து சர்க்கரைப் பொங்கல் படைத்து தன் நேர்த்திகடனை தீர்க்கின்றனர்.

வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் (Venni Karumbeswarar Temple) – திருவிழா:

இந்த கோயிலில் நவராத்திரி 9 நாட்கள் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் (Venni Karumbeswarar Temple) – தல சிறப்பு:

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் வெண்ணிகரும்பேஸ்வரர் மீது பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது.

வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் – மூலவரின் தன்மை:

வித்தியாசமான சிவ தளங்களில் வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாக உள்ளது. வெண்ணிகரும்பேஸ்வரர் சிவ லிங்கம் கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தார் போல் உள்ளது.

வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் – சுகப்பிரசவம்:

வளைக்காப்பு முடிந்த உடன் இந்த கோயிலில் உள்ள அம்பாள் ஸ்ரீ செளந்தர் நாயகியை வணங்கி வளையல்களை கட்டி விட்டால், சுகப்பிரசவம் நிச்சயம் என நம்பப்படுகின்றது.

கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement