செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பலன்கள்
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். ஜோதிடத்தினபடி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். கிரகங்களின் பெயர்ச்சியை வைத்தே 12 ராசிகளுக்கான ராசி பலன்களும் கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு ரசிக்கும் வெவ்வேறு வகையான பலன்களை அளிக்கும். 12 ராசிகளில் ஒரு சில ராசிகள் சுப பலன்களையும் ஒரு சில ராசிகள் அசுப பலன்களையும் பெறலாம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
ஒரு சில நேரங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட ராசிகள் பெயர்ச்சி அடைந்து இருக்கும். அப்படி ஒரு ராசியில் இரு கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த வகையில் இந்த டிசம்பர் மாத இறுதியில் விருச்சிக ராசியில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால், தனசக்தி யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக பார்க்கப்படுகிறது. எனவே, தனசக்தி யோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யாரென்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Venus Mars Conjunction in Scorpio Lucky for This Zodiac Sign in Tamil:
சிம்ம ராசி:
சிம்ம ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை அதிர்ஷ்டம் தருவதாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊக்கத்தொகை போன்ற லாபத்தை பெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல் புதிய வீடு, மனைகள் போன்றவை வாங்கும் வாய்ப்புகளும் வரும்.
வியாழனின் ஆசீர்வாதத்தால் 2024-ல் யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியின் முதலாவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால், விருச்சிக ராசிகாரர்களின் வாழ்க்கை உயரும். மேலும், இதுவரை இருந்துவந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு வழக்கத்தை விட இக்காலத்தில் அதிகமாக கிடைக்கும். மேலும், விருச்சிக ராசியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுன ராசி:
மிதுன ராசியின் ஆறாவது வீட்டில் சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமாக இக்காலத்தில், அதிர்ஷ்டம் கைகூடி வரும். சமூகத்தில் உங்களின் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். முக்கியமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |