சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்.! இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கக்கூடும்..

Advertisement

Venus Mars moon Conjunction in Leo 2023 in Tamil

ஜோதிடத்தின்படி 12 ராசிகளின் ராசிபலன்களும் கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் பெயர்ச்சி அடையும் போது அதன் விளைவு ஒரு சில ராசிகளுக்கு நற்பலன்களையும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் அளிக்கும். அதேபோல் ஒரு ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்கும்போது அது பல யோகங்களை அளிக்கும். எனவே சிம்ம ராசியில் இப்போது சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை உள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மட்டும் இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஓகே வாருங்கள் கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எதுவென்று பின்வருமாறு பார்க்கலாம்.

திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்:

மிதுன ராசி:

மிதுனராசி

மிதுன ராசியின் 3- வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகி உள்ளது. இந்த மூன்று கிரங்களின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு இக்காலத்தில் வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை முடிவுக்கு வராமல் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும்.

இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா..?

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசியின் 5 -வது வீட்டில் திரிகிரக சேர்க்கை உருவாகி உள்ளது. இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஏற்படும். மேலும், இக்காலத்தில் இருக்கும் அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி நிதிநிலைமை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பாராட்டும் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

சிம்ம ராசியின் 1- ஆம் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகி உள்ளது. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் பணம் சம்மந்தபட்ட விசயங்களில் நன்மைகளை பெறுவார்கள். பணிபுரிவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் நபர்கள்  நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுவார்கள்.

குரு சந்திரன் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட கடலில் மூழ்க போகின்றார்கள்..! இதில் உங்கள் ராசி உள்ளதா என்று பாருங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement